Published : 08 Jan 2017 10:52 AM
Last Updated : 08 Jan 2017 10:52 AM
நாடு முழுவதும் ஜன.2-வது வாரத்தில் சாலை பாதுகாப்பு வாரம் கடைப்பிடிக்கப்படும் நிலையில், தமிழகத்தில் ஜன. 3-வது வாரத் துக்கு சாலை பாதுகாப்பு வாரம் மாற்றப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் சாலை பாது காப்பின் அவசியத்தை வலியுறுத்தி கடந்த 28 ஆண்டுகளாக ஜனவரி மாதத்தில் ஒரு வாரம் சாலை பாதுகாப்பு வாரம் கடைப்பிடிக் கப்பட்டு வருகிறது.
இந்த ஒரு வாரமும் சாலையில் பாதுகாப்பாக பயணம் செய்வது, சாலை விதிகளை மதித்து வாகனம் ஓட்டுவது, இருசக்கர வாகனங்களில் செல்லும்போது கட்டாயம் ஹெல் மெட் அணிய வேண்டும், கார்களில் செல்லும்போது கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்பன உட்பட சாலை பாதுகாப்பு தொடர்பான பல விஷயங்களை வலியுறுத்தி பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், ஓட்டுநர்கள், நடத்துநர்கள், பாதசாரிகள் என அனைத்துத் தரப்பினரும் பங்கேற் கும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஒவ் வொரு பகுதியிலும் நடைபெறும்.
நாடு முழுவதும் கடந்த 2014 வரை ஜனவரி மாதத்தில் முதல் வாரத்தில் அதாவது ஜன.1 முதல் 7-ம் தேதி வரை சாலை பாதுகாப்பு வாரம் நடத்தப்பட்டது. 2015-ல் ஜன. 2-வது வாரத்துக்கு சாலை பாதுகாப்பு வாரம் மாற்றப்பட்டது. ஜன. 2-வது வாரத்தில் பொங்கல் பண்டிகை வருகிறது. இதனால் வாரம் முழுவதும் சாலை பாது காப்பு வாரம் கொண்டாட முடியாத சூழல் உருவானது. பின்னர் பொங்க லுக்கு விடுமுறை விட்டு சாலை பாதுகாப்பு வாரம் கொண்டாடப் பட்டது. கடந்த ஆண்டும் ஜன. 2-வது வாரத்தில்தான் சாலை பாதுகாப்பு வாரம் நடைபெற்றது.
இந்த ஆண்டும் நாடு முழுவதும் ஜன. 11-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை சாலை பாதுகாப்பு வாரம் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தி லும் ஜன. 11 முதல் 17 வரை சாலை பாதுகாப்பு வாரம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் சாலை பாதுகாப்பு வாரம் ஜன. 3-வது வாரத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. ஜன. 17-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை சாலை பாதுகாப்பு வாரத்தை கடைப்பிடிக்க வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக போக்குவரத் துத் துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில் ஜன. 2-வது வாரத்தில் சாலை பாதுகாப்பு வாரம் கடைப்பிடித்தால் பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்துக்கு பாதிப்பு ஏற்படும்.
கடந்த இரு ஆண்டுகளும் சாலை பாதுகாப்பு வாரத்தின் மத்தியில் பொங்கலுக் காக 2 நாள்கள் விடுமுறை விடப் பட்டது. இதனால் சாலை பாதுகாப்பு வாரத்தை முழு ஈடுபாட்டுடன் கொண்டாட முடியாமல் போனது. இதை தவிர்ப்பதற்காக நாடு முழுவதும் ஜன. 2-வது வாரத்தில் சாலை பாதுகாப்பு வாரம் அறிவிக்கப்பட்டுள்ளபோதிலும், தமிழகத்தில் ஜன. 3-வது வாரத் துக்கு மாற்றப்பட்டுள்ளது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT