Published : 14 Sep 2016 08:24 AM
Last Updated : 14 Sep 2016 08:24 AM

தீபாவளியின்போது போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சென்னையில் 3 இடங்களில் இருந்து வெளியூர் பேருந்துகள் இயக்கம் - போலீஸார், போக்குவரத்து துறையினர் விரைவில் ஆய்வு

தீபாவளி பண்டிகையின்போது சென்னையின் முக்கிய சாலை களில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, வெளியூர் பேருந்துகளை வெவ்வேறு இடங்களில் இருந்து பிரித்து இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான இடங்களைத் தேர்வு செய்ய போலீ ஸார், போக்குவரத்து துறையினர் ஓரிரு நாளில் நேரில் ஆய்வு செய்ய உள்ளனர்.

சென்னை கோயம்பேடு பகு தியைச் சுற்றியுள்ள பகுதிகளில் குடியிருப்புகள் அதிகரித்துள்ளன. மேலும் பல்வேறு பகுதிகளை இணைக்கும் பகுதியாகவும் கோயம்பேடு உள்ளது. இதனால், காலை, மாலை நேரங்களில் இப்பகுதியில் 50 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வாகனங்கள் கடந்து செல்கின்றன. கோயம்பேட்டில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், மாநகரின் பல்வேறு இடங்களுக்குச் செல்லும் முக்கிய சாலைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மணிக்கணக்கில் சாலைகளில் காத்திருந்து உடல் சோர்வுடன், மனஉளைச்சலுக்கு ஆளாகும் நிலை ஏற்படுகிறது.

கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து அரசு போக்கு வரத்துக் கழகங்கள் சார்பில் தினமும் 1,500க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பண்டிகை நாட்களில் சுமார் 4 ஆயிரம் அரசு பேருந்துகள் இயக் கப்படும். கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் இருந்து தினமும் 600 ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பண்டிகை நாட்களில் இந்த எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டிவிடும்.

எனவே, போக்குவரத்து நெரி சலைத் தவிர்க்க, சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பேருந் துகளைப் பல்வேறு இடங்களில் இருந்து பிரித்து இயக்குமாறு பொதுமக்கள் தொடர்ந்து வலி யுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது. முதல்முறையாக, தீபாவளி பண்டி கைக்குச் சென்னையில் 3 முக்கிய இடங்களில் இருந்து வெளி யூருக்குப் பேருந்துகள் இயக்குவ தாக அக்கூட்டத்தில் முடிவு செய் யப்பட்டுள்ளது.

இதுகுறித்து கேட்டபோது, அரசு போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது: பண்டிகை நாட்களின்போது சென்னை, புறநகர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற் படுகிறது. ஜிஎஸ்டி, பூந்தமல்லி, அண்ணா சாலை முற்றிலும் முடங்கி விடுகின்றன. கோயம்பேடு பேருந்து நிலையத்தைக் கடந்து செல்லவே 3 மணி நேரம் ஆகிறது. இதனால் வெளியூர் செல்பவர்கள் மட்டுமின்றி, பணி முடிந்து வீடு திரும்புபவர்களும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

வரும் தீபாவளி பண்டிகையின் போது, இவ்வாறு நேராமல் தவிர்ப் பதற்கான ஏற்பாடுகள் குறித்து அமைச்சருடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில், சென்னை மாநகரத்தை மையமாக கொண்டு தெற்கு, வடக்கு, மேற்கு என பிரித்து 3 இடங்களில் இருந்து பேருந்து களை இயக்க முடிவு செய்யப் பட்டுள்ளது.

குறிப்பாக, தென் மாவட்டங்க ளுக்குச் செல்லும் 40 சதவீத பேருந்துகளை வண்டலூர் அல்லது கூடுவாஞ்சேரியில் இருந்தும், கிழக்கு கடற்கரை சாலை பகுதி மற்றும் மாதவரத்தில் இருந்தும் பேருந்துகளை இயக்கலாம் என உத்தேசித்துள்ளோம். இடங்கள் இன்னும் இறுதி செய்யப்பட வில்லை. நேரில் ஆய்வு செய்த பிறகு முடிவு செய்யப்படும்.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x