Published : 02 Sep 2016 12:48 PM
Last Updated : 02 Sep 2016 12:48 PM

தொடங்கிய வேகத்தில் முடங்கியது ரூ.200 கோடி ரிங்ரோடு திட்டம்: மதுரையின் மானத்தை ‘கப்பலேற்றும்’ விமான நிலைய சாலை

மதுரைக்கு அவப்பெயரை ஏற்ப டுத்தும் வகையில் விமான நிலை யத்திற்கு செல்லும் ரிங் ரோடு போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் காணப்படுகிறது. இந்த சாலையை விரிவாக்கம் செய்து புதுப்பிக்க அறிவிக்கப்பட்ட ரூ.200 கோடி ரிங் ரோடு திட்டம் தொடங்கிய வேகத்தில் முடங்கியது.

சென்னைக்கு அடுத்து தமி ழகத்தில் மதுரை மிகப்பெரிய நகராக திகழ்கிறது. ஆன்மீகம், மருத்துவம், சுற்றுலா, தொழில், வியாபாரம் முக்கியத்துவம் பெற்ற நகரம் என்பதால் மதுரைக்கு தமிழகத்தின் பிற மாவட்டங்கள், வடமாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து வருவோர் அதிளவில் இருக்கின்றனர். அவர்கள் துரிதமாக வந்து செல்வ தற்காக புறநகர் பகுதியான பெருங்குடியில் மதுரை விமான நிலையம் செயல்படுகிறது. இந்த விமான நிலையத்திற்கு மதுரை நகரப்பகுதியில் இருப்பவர்கள், தெற்கு வாசல், வில்லாபுரம் வழியாகவும், மாட்டுத்தாவணி பஸ்நிலையத்தில் இருந்து வருவோர் ரிங் ரோடு வழியாகவும் செல்லலாம். தென் மாவட்டங்களில் இருந்து வருவோர், திருமங்கலம் கப்பலூர் ரிங்ரோடு வழியாகவும், திருச்சியில் இருந்து வருவோர் திருச்சி-மதுரை சாலை வழியாக ரிங்ரோடு வழியாகவும் வரலாம்.

இந்த சாலைகள் அனைத்தும், தற்போது போக்குவரத்திற்கே பய ன்படுத்த முடியாத அளவுக்கு மிக மோசமாக இருக்கிறது.

வாகன ஓட்டிகளுக்கு சவால்

திருமங்கலத்தில் இருந்து விமானநிலையம் வரும் சாலை யின் நடுவில் பாதாள குழி களும், மேடுபள்ளமுமாகவும் காணப்படுகிறது. சாலையின் இரு கரைப்பகுதியிலும் மண் குவியல் இருப்பதால் கரணம் தப்பினால் மரணம் என்ற நிலை யில் இந்த சாலையை கடந்து செல்வது வாகன ஓட்டிகளுக்கு சவாலாக இருக்கிறது.

தொடரும் விபத்துகள்

மதுரை மாட்டுத்தாவணி, பாண்டிக்கோயில் வழியாக விமான நிலையம் செல்லும் ரிங் ரோடு கடந்த மூன்று மாதம் முன் படுமோசமாக இருந் தது. தற்போது இந்த சாலைகளில் குண்டு குழிகள், மேடு பள்ளங்களில் கற்கள், மணல் நிரப்பி தார் ஊற்றி பஞ்சர் போட்டு தற்காலிகமாக சீரமைத்தனர். அதனால், இந்த சாலையில் பஞ்சர் போட்டு சீரமைக்கப்பட்ட பகுதி மேடாகவும், மற்றொரு பகுதி தாழ்வாகவும் இருப்பதால் விபத்துகள் நடக்கின்றன. இரு சக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து படுகாயம் அடைவதும், விபத்துகளில் சிக்கி இறப்பதும் தொடர்கதையாகின்றன. மதுரை தெற்கு வாசல், அவனியாபுரம் வழியாக வரக்கூடிய சாலையும், மோசமாக இல்லாவிட்டாலும் த ரமாக இல்லை.

கருப்பாயூரணி விலக்கில் இருந்து செல்லும் தூத்துக்குடி-கன்னியாகுமரி, மதுரை-திருச்சி சாலைகளும் கற்கள் பெயர்ந்து பல்லைக் காட்டுகின்றன.

பெருங்குடியில் விமான நிலையம் செல்லும் சாலையின் நடுவில் காணப்படும் பாதாள குழிகளில் விமானநிலையத்தில் இருந்து வரும் கார்கள் ஏறி, இறக்கும்போது அவ்வப்போது தரைதட்டி டயர்கள் கழண்டு ஓடு கின்றன.

தமிழகத்தின் பிற மாவட்ட ங்களில் இருந்தும், விமான நிலையத்தில் இருந்தும் வரும் மக்கள், சுற்றுலாப்பயணிகள், தொழில் அதிபர்கள் மதுரையில் இந்த ரிங்ரோடு சாலைகளில் பயணிக்கும்போது, சாலையை விரைவாக கடந்து செல்ல முடியாமல் தவிக்கின்றனர். முதிய வர்கள், இதய நோயாளிகள், இந்த சாலைகளில் பயணம் செய்ய அச்சமடைந்துள்ளனர்.

வளர்ச்சிக்கு தடை

ஒரு ஊருக்கு முகத்தோற்றமே அந்த ஊரின் சாலைகள்தான். ஆனால், விமானநிலையத்தில் இருந்து மதுரைக்குள் ரிங் ரோடு வழியாக நுழையும் விமானப் பயணிகள், மறுபடியும் மதுரை வர நினைத்துக்கூட பார்க்க மாட்டார்கள். அந்தளவுக்கு ரிங் ரோடுகள், மதுரைக்கு அவப்பெயரை ஏற்ப டுத்தும் வகையில் இருக்கிறன. அந்தளவுக்கு ரிங் ரோட்டின் அவலம், மதுரை வளர்ச்சிக்கும் தடையாக இருக்கிறது. இந்த சாலையை அடிக்கடி மத்திய அமைச்சர்கள், மாநில அமைச் சர்கள், பெரும் தொழில் அதிபர்கள் பயன்படுத்துகின்றனர்.

ஆனாலும், இந்த சாலைக்கு விடிவு காலம் ஏற்ப டாமல் இருப்பது மதுரைக்கே ஏற்பட்ட சாபகேடாக இருக்கிறது.

இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை வட்டாரத்தில் விசாரித் தபோது, சாலைகள் விரைவில் பராமரிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது, என்றனர்.

மாநில நெடுஞ்சாலைத்துறையின் மெத்தனம்

ரிங் ரோட்டை சீரமைக்க தமிழக அரசு 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, டெண்டர் விட்டு ஆட்சியர் தலைமையில் கடந்த மார்ச் 1-ஆம் தேதி பணிகள் தொடங்கப்பட்டன. தொடங்கிய வேகத்தில் அதன்பின் எந்த பணிகளும் நடக்கவில்லை. தேர்தலுக்கு முன் மீண்டும் பணிகள் தொடங்குவதாக இருந்தது. தாமதமாகுவதற்கான காரணம் நிதி ஒதுக்கீடா அல்லது தொழில்நுட்ப பிரச்சனையா என்பது தெரியவில்லை.

இந்த சாலையில் 18 கி.மீ., தூரம் கடந்த காலம் மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டது. தற்போது மாநகராட்சி இந்த சாலையை மாநில நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைத்தது. மாநில நெடுஞ்சாலைத்துறை இந்த சாலையில் விரிவாக்கப்பணிகள் மேற்கொள்ளலாம் அல்லது தேசிய நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைக்கலாம்.தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் எடுத்துக் கொள்ள தயாராக இருந்தும், மாநில நெடுஞ்சாலைத்துறை ஒப்படைக்காமல் இருக்கிறது. இதுபோன்ற பல காரணங்களால் ஏர்போட் செல்லும் ரிங் ரோடு அவலம் விமானம் மூலம் கடல் கடந்து பறக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x