Published : 13 Mar 2014 12:00 AM
Last Updated : 13 Mar 2014 12:00 AM
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களை தருமாறு கேட்டு மத்திய அரசுக்கு தமிழக அரசு சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக இணைச் செயலாளர் சுசித்ரா துரைக்கு தமிழக அரசின் கால்நடை, பால்வளம் மற்றும் மீன்வளத்துறையின் செயலாளர் எஸ்.விஜயகுமார் செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
இலங்கை – இந்திய மீனவர் பிரதிநிதிகளிடையே சென்னையில் கடந்த ஜனவரி 27-ம் தேதி பேச்சுவார்த்தை நடந்தது. அடுத்தகட்ட பேச்சுவார்த்தையை மார்ச் 13-ம் தேதி (இன்று) இலங்கையில் நடத்துவது என்றும், அதற்கு முன்பாக இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் அப்போது முடிவு எடுக்கப்பட்டது.
ஆனால், இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்ற 177 தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களின் 44 படகுகளை விடுவிப்பது பற்றிய எந்த ஒரு தகவலும் இதுவரை எங்களுக்கு வரவில்லை. இந்த விவகாரத்தில் மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என்பதை தெரிவிக்க வேண்டுகிறோம்.
இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT