Published : 05 Jan 2014 12:00 AM
Last Updated : 05 Jan 2014 12:00 AM
தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. சனிக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி, இது நாகப்பட்டினத்திலிருந்து தென் கிழக்கு திசையில் 470 கி.மீ. தூரத்தில் நிலை கொண்டுள்ளது. இது மேலும் தீவிரமடைந்து மேற்கு வட மேற்கு திசையில் நகரும். இது ஞாயிற்றுக்கிழமை மாலை இலங்கை கரையை கடக்கும்.
இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரி யின் கடலோர மாவட்டங் களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். ஆனால் உள் மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும்.
தமிழக, புதுச்சேரி கடலோரத்தில் காற்று 45 கி.மீ. முதல் 65 கி.மீ. வேகத்தில் திங்கள்கிழமை முதல் வீசக்கூடும். இதனால் கடல் மிகவும் சீற்றத்துடன் காணப்படும்.
எனவே மீனவர்கள் ஆழ் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் கரையோரத்தில் இருப்பவர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர். நாகப்பட்டினம் மற்றும் புதுச்சேரி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
சென்னையிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் லேசான மழை பெய்யும். தரைக் காற்று பலமாக வீசக்கூடும். கடந்த 24 மணி நேரத்தை பொருத்தவரை தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவியது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT