Published : 17 Apr 2014 10:26 AM
Last Updated : 17 Apr 2014 10:26 AM

தென்சென்னை தொகுதியில் பயன்படுத்த 5 ஆயிரம் புதிய வாக்குப்பதிவு இயந்திரங்கள்: ஒரே நேரத்தில் 383 வேட்பாளர்களுக்கு வாக்களிக்க முடியும்

தென்சென்னை மக்களவைத் தொகுதியில் பயன்படுத்துவதற் காக 5 ஆயிரம் புதிய வகை வாக்குப்பதிவு இயந்திரங்களும், 1800 கண்ட்ரோல் யூனிட்களும் புதன்கிழமை கொண்டு வரப்பட் டன. அவை கிண்டி அண்ணா பல் கலைகழகத்தில் வைக்கப்பட்டு, பரிசோதித்து பார்க்கப்படு கின்றன.

மக்களவைத் தேர்தலில் தென் சென்னை, சேலம் மற்றும் நாமக் கல் தொகுதிகளில் புதிய வகை யிலான வாக்குப்பதிவு இயந் திரங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

பழைய வாக்குப்பதிவு இயந்திரங்களில் அதிகபட்சமாக 1,500 பேர் வாக்களிக்க முடியும். நான்கு வாக்குப்பதிவு இயந் திரங்களை மட்டுமே ஒரு கண்ட்ரோல் யூனிட்டுடன் இணைக்க முடியும்.

ஆனால் தற்போது வந்துள்ள புதிய வகை இயந்திரத்தில் 2 ஆயிரம் பேர் வாக்களிக்க முடியும். மேலும், ஒரு கண்ட் ரோல் யூனிட்டுடன் 24 வாக்குப் பதிவு இயந்திரங்களை இணைக்க முடியும். அதாவது, ஒரு தொகுதியில் 383 வேட் பாளர்கள் (நோட்டா பட்டனை தவிர்த்து) போட்டியிட்டாலும், வாக்குச்சீட்டு பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படாது.

இதுகுறித்து, தேர்தல் அலு வலர் ஒருவர் கூறியதாவது:

புதிய வகை இயந்திரங்களை உடைக்கவோ, சேதப்படுத்தவோ முடியாது. இதில் பதிவு செய்யப் பட்டிருக்கும் வாக்குகளில் கோளாறு ஏற்படாது. அதாவது, மெமரி பெய்லியர் ஆகாது. பழைய இயந்திரங்களில் சார்ஜ் போய்விட்டால் பேட்டரியை மாற்ற வாய்ப்பில்லை.

இந்த இயந்திரத்தில் மாற்ற முடியும். அதுமட்டு மின்றி, முன்பெல்லாம் தேர்தல் முடிவுகளை கண்ட்ரோல் யூனிட் டில் பார்க்க மட்டுமே முடியும். ஆனால் இதில் பிரின்ட் அவுட் எடுக்கும் வசதி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தென்சென்னையில் உள்ள 1,167 வாக்குச்சாவடிகளிலும் இந்த புதிய வகை இயந்திரங்கள் பயன் படுத்தப்படும். இது, எலக்ட்ரா னிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (இ.சி.ஐ.எல்) என்ற நிறு வனத்திடமிருந்து வாங்கப் பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத் தில் வைக்கப்பட்டுள்ள இந்த இயந்திரங்களை இ.சி.ஐ.எல் அதிகாரிகள் சரிபார்த்து வரு கின்றனர். அந்தப் பணியை வேட்பாளர்களின் பிரதிநிதிகள் பார்வையிட்டனர்.

இதுகுறித்து தென்சென்னை பாஜக வேட்பாளர் இல.கணேச னின் பிரதிநிதி பி.நடராஜன் கூறுகையில், “இந்த இயந் திரங்கள் எப்படி இயங்குகின்றன என்றும், எப்படி கணக்கெடுப்பு நடக்கிறது என்றும் எங்களுக்கு செய்து காட்டப்பட்டன” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x