Published : 29 Apr 2017 05:25 PM
Last Updated : 29 Apr 2017 05:25 PM

மோடியின் இலங்கை வருகையையோட்டி தமிழக மீனவர்களின் படகுகள் விடுவிக்கப்படுமா?- இலங்கை அமைச்சர் தகவல்

இலங்கையின் வட மாகாணங்களில் உள்ள மீனவ சங்களின் ஒப்புதலைப் பெற்றப் பின்னரே தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என அந்நாட்டு மீன்வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் சார்பாக இலங்கையில் மே மாதம் 12-ம் தேதியில் இருந்து 14-ம் தேதிவரை புத்தமதம் தொடர்பான சர்வதேச விசாய விழா மே 12 முதல் 14 வரை இலங்கையில் நடைபெற உள்ளது.

உலகம் முழுவதிலிமிருந்து 400க்கும் மேற்பட்ட முக்கிய விருந்தினர்கள் இந்த விழாவில் கலந்து கொள்ள உள்ளனர். இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க விடுத்த அழைப்பை ஏற்று இந்தியாவிலிருந்து பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். இந்நிலையில் கொழும்பில் சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் இலங்கையின் மீன்வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர கூறியதாவது,

"இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையின் போது எல்லை தாண்டியதால் கைப்பற்றப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிப்பது தொடர்பாக எவ்விதமான பேச்சுவார்த்தையும் நடைபெறாது.

மீனவப் பிரச்சினையை தீர்ப்பதற்கு இந்திய அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருவதால் எதிர்காலத்தில் தமிழக மீனவர்களின் கைப்பற்றப்பட்ட படகுகளில் சிலவற்றை விடுவிப்பது தொடர்பாகவும் கவனம் செலுத்­தி வருகிறோம். அவை இலங்கையின் வட மாகாணங்களில் உள்ள மீனவ சங்களின் ஒப்புதலைப் பெற்றப் பின்னரே படகுகளை விடுதலை செய்வது தொடர்பாக முடிவு செய்யப்படும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x