Published : 27 May 2017 10:23 AM
Last Updated : 27 May 2017 10:23 AM

பள்ளி நோட்டுகளுக்கு தட்டுப்பாடு அபாயம்: தண்ணீர் பற்றாக்குறையால் காகித தொழிற்சாலைகளில் உற்பத்தி வீழ்ச்சி

மழையில்லாமல் ஏற்பட்ட தண்ணீர் பற்றாக்குறையால் காகித தொழிற் சாலைகளில் உற்பத்தி குறைவால் பள்ளி நோட்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதால் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டுகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் 7-ம் தேதி திறக்கப்படுகிறது. ஆனால், அதற்கு முன்பே தனியார் மெட்ரிக் பள்ளிகளில் நோட்டுகள், புத்தகங்கள் விநியோகம் செய்யும் பணி தொடங்கிவிட்டது. கடந்த கல்வியாண்டில் இந்நேரத்தில் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் மாணவர்களுக்கு நோட்டுகள் விநியோகம் முடிந்திருக்கும். ஆனால், இந்த ஆண்டு காகித தொழிற்சாலைகளில் ஆர்டர் கொடுத்தும் நோட்டுகள் வரவி ல்லை. அதனால், பெரும் பாலான பள்ளிகளில் இன்னும் நோட்டுகள் விநியோகம் தொடங்கவில்லை. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் தொடங்கிவிட்டால், நோட்டுகளை வாங்க பெற்றோரும், பள்ளிக் குழந்தைகளும் ஸ்டே ஷனரி கடைகள், நோட்டு புத்தகக் கடைகளில் குவிவார்கள்.

இந்நிலையில் ஸ்டேஷனரி கடைகள், நோட்டு புத்தகக் கடைகளில் பள்ளி நோட்டு விற்பனை முழுமையாகத் தொடங் காத நிலையில் தற்போதே நோட்டு களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கும்போது வழக் கத்துக்கு மாறாக தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளதால் மாணவ, மாணவிகளுக்கு நோட் டுகள் கிடைப்பதில் சிக்கல் ஏற் பட்டுள்ளது.

மதுரை தெற்குவாசல் நோட்டுப் புத்தக விற்பனையாளர் வினோத் கூறியதாவது:

நோட்டுகளை பொறுத்த வரை யில் முன்பு, சாதாரண நோட்டுகள் (சி கிரேடு), மீடியம் நோட்டுகள் (பி கிரேடு), நயம் நோட்டுகள் (ஏ கிரேடு) ஆகிய மூன்று வகையாக விற்கப்படும். ஏ கிரேடு நோட்டுகள், வெண்மையாக தரமாக இருக்கும். பி கிரேடு நோட்டுகள் கொஞ்சம் நிறம் குறைவாக இருக்கும். சி கிரேடு நோட்டுகள் மட்டமாக இருக்கும். தற்போது சாதாரண சி கிரேடு நோட்டுகளை யாரும் வாங்க ஆர்வம் காட்டுவதில்லை. அத னால், அந்த வகை நோட்டுகள் விற்பனைக்கு வருவதே இல்லை. நோட்டுகளுக்கான காகித தயாரிப்புக்கு தண்ணீரே அடிப்படை மூலதனம். மின்சாரம் இல்லாவிட்டாலும், ஜெனரேட்டரை கொண்டு இயக்கி காகிதங்களை உற்பத்தி செய்து விடலாம். ஆனால், கடந்த 6 மாதமாக மழையில்லாமல் கடும் வறட்சி ஏற்பட்டதால் காகித தொழிற்சாலைகளில் காகித உற்பத்தி குறைந்தது.

அதனால், இந்த ஆண்டு நோட்டுகளின் விலை உயர்ந் துள்ளது. கடந்த ஆண்டு 20 ரூபாய், 21 ரூபாய்க்கு விற்ற ஏ கிரேடு ஒரு குயர் நோட்டுகள் பள்ளிகள் திறக்காத நிலையில் தற்போதே 24 ரூபாய், 25 ரூபாய்க்கு விற்கிறது.

கடந்த ஆண்டு 17 ரூபாய்க்கு விற்ற ஒரு குயர் பி கிரேடு நோட்டுகள், தற்போது 19 ரூபாய்க்கு விற்கிறது. பள்ளிகள் திறந்தால் தட்டுப்பாடு அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றார்.

தெற்குவாசலை சேர்ந்த மற்றொரு நோட்டு புத்தகக் கடை ஊழியர் மகாதேவன் கூறியது: கடந்த ஆண்டு சிறிய அளவு நோட்டு 8 ரூபாய்க்கு விற்றது. இந்த ஆண்டு 10 ரூபாய்க்கு விற்கிறது. இந்த ஆண்டு நோட்டுகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அரசு பள்ளிகளில் இலவச நோட்டுகள் விநியோகிக்க, அரசு டெண்டர் விட்டு மொத்தமாக ஆடர் செய்து கொள்முதல் செய்வதால் கடைகளில் நோட் டுகள் விற்பனைக்கு வருவது குறைந்துள்ளது என்றார்.

30 சதவீதம் விலை அதிகரிப்பு

வத்தலகுண்டு நோட்டு புத்தக விற்பனையாளர் ஆர். கண்ணன் கூறியதாவது:

ஒவ்வொரு ஆண்டும் நோட்டுகள் தயாரிப்பு ஜனவரியில் தொடங்கி ஜூலை வரை நடக்கும். தனியார் நிறுவனங்களுக்கு தேவையான நோட்டுகள், வவுச்சர் புத்தகங்கள், பள்ளிகள் மாணவ, மாணவிகளுக்கு தேவையான நோட்டுகள் உள்ளிட்டவை தயார் செய்யப்படுகின்றன. தற்போது காகித விலை உயர்வு, தண்ணீர் பற்றாக்குறையால் நோட்டு புத்தகங்கள் தயாரிப்பு மந்தம் அடைந்துள்ளது. அதனால், கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, இந்த ஆண்டு நோட்டுகள் விலை 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. தண்ணீர் பற்றாக்குறையால் காகித தொழிற்சாலைகளில் நோட்டுகள் தயாரிப்பு குறைந்துள்ளது. அதனால், பிப்ரவரியில் ஆர்டர் கொடுத்தவர்களுக்கே தற்போதுதான் நோட்டுகள் வர ஆரம்பித்துள்ளன. அதற்கு பின் ஆர்டர் கொடுத்தவர்களுக்கு நோட்டுகள் வரவில்லை. பள்ளிகள் திறப்பதற்குள் வருமா என்பது சந்தேகம்தான் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x