Last Updated : 28 Aug, 2016 11:35 AM

 

Published : 28 Aug 2016 11:35 AM
Last Updated : 28 Aug 2016 11:35 AM

தமிழகத்தின் 2-வது மிகப் பெரியது என கருதப்படும் பாறை ஓவிய தொகுப்புகள் கொண்ட வெங்கட்டாபுரம் மலை அழியும் அபாயம்: தொல்லியல் ஆய்வாளர்கள் வேதனை

தமிழகத்தின் 2-வது மிகப் பெரிய பாறை ஓவிய தொகுப்புகளைக் கொண்ட வெங்கட்டாபுரம் மலை களை உடைத்து, பாறை ஓவியங் கள் அழிக்கப்பட்டு வருவதை தடுக்க வேண்டும் என தொல்லியல் ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

தமிழகத்தில் முதல் பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டது கிருஷ்ணகிரி மாவட்டம் மல்லபாடி கிராமத்தில்தான். இம்மாவட்டத் தில் கிருஷ்ணகிரி, சூளகிரி, ராயக் கோட்டை, உள்ளிட்ட பகுதிகளை தலைமையிடமாகக்கொண்டு ஆட்சி செய்த போசாள மன்னர்கள், சோழர்கள், விஜயநகர பேரரசர்கள் உள்ளிட்ட அரசர்கள் 20-க்கும் மேற்பட்ட கோட்டைகள் கட்டியுள் ளனர். வீரத்தை பறைசாற்றுபவை மற்றும் துரோகம் செய்தவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனைகள் குறித்த சிலைகள், நடுகற்கள் இம்மாவட் டத்தில் பரவலாகக் காணப்படுகின் றன.

நடுகற்கள், சங்க கால சிலைகள், பாறை ஓவியங்கள் உள்ளிட்டவை சமூக விரோதிகளாலும், கிரானைட் மற்றும் கல் உடைக்கும் தொழி லாலும் அழிந்து வருகின்றன. தொல்லியல் பொருட்களைப் பாதுகாக்க வேண்டும் என்கிற கோரிக்கை பல ஆண்டுகளாக உள்ளது.

3 ஆயிரம் ஆண்டுகள் பழமை...

இந்நிலையில், கடந்த ஜூலை மாதம், கிருஷ்ணகிரி அரசு கலைக் கல்லூரி வரலாற்று ஆய்வு மாணவர்கள், பர்கூர் ஒன்றியம் வெங்கட்டாபுரம் கிராமத்தில் கல்யாணபோடி என்கிற மலையில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பாறை ஓவியங்களை கண்டறிந்தனர். தமிழகத்தின் 2-வது மிகப்பெரிய ஓவியத் தொகுப்புகள் கொண்ட மலை யாக திகழ்வதாகவும், இந்தக் குகையை முறையாக ஆய்வு செய்தால் இன்னும் ஏராளமான தகவல்கள் கிடைக்கும் எனவும் தெரிவித்திருந்தனர். ஆனால் அதுவரை இந்த மலை அழிக்கப் படாமல் இருக்குமா என்பது சந்தேகமே என்கிறார் பேராசியர் முனைவர் பெ.வெங்கடேஸ்வரன்.

இம்மலையில் தொல்லியல் ஆய்வாளர் ஓசூர் அறம் கிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இது குறித்து அவர் ‘தி இந்து’விடம் கூறும்போது, “இயற்கை வளமும், வரலாற்றுச் சிறப்பும் வாய்ந்த பல மலைப்பாறைகள் வெடி வைத்துத் தகர்க்கப்படுகின்றன அல்லது வெட்டி எடுக்கப்படுகின்றன. அதற்கு தற்போது அழிக்கப்பட்டு வரும் வெங்கட்டாபுரம் மலையே சான்றாக உள்ளது.

இந்தத் தொன்மையான ஓவியங் களைப் பாதுகாக்க வேண்டும் என்கிற ஒரு சிறிய குரல்கூட யாரிடம் இருந்தும் வரவில்லை. பாறைகளை உடைத்துக்கொண்டு இருந்தவர்கள் 60 அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டி பாதையை அடைத்து வைத்துள்ளனர். பாறை ஓவியங்களைக் காக்க தொல்லியல் துறையும் மாவட்ட ஆட்சியரும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மலையில் நடைபெறும் கல் உடைக்கும் பணியை தடுத்து நிறுத்த வேண்டும். முன்னோர்களின் வாழ்க்கை முறையை அறிய உதவும் பாறை ஓவியங்கள் அழிக்கப்படுவதைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x