Published : 07 Jan 2014 07:41 PM
Last Updated : 07 Jan 2014 07:41 PM
தமிழ்நாடு வேளாண்மை பல்கலையில் வரும் 11ம் தேதி முதல் உழவர்களுக்கு உறுதுணை புரியும் வகையில் தானியங்கி விதை வழங்கும் கருவி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இது குறித்து பல்கலை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான உழவர் தினவிழா 11ம் தேதி நடைபெறுகிறது. விழாவில், வேளாண்மை துறை அமைச்சர் மற்றும் வேளாண்பல்கலை இணைவேந்தர் செ.தாமோதரன், தானியங்கி விதை வழங்கும் கருவியை அறிமுகப்படுத்த உள்ளார்.
இக் கருவி மூலம் வீட்டுத்தோட்டம் மற்றும் மாடித்தோட்டம் அமைப்பதற்கு தேவையான விதைகளை நுகர்வோர் மற்றும் உழவர்கள் மிக எளிதில் பெறலாம். இக் கருவி மூலம் காய்கறி, மலர் மற்றும் சிறிய விதைகள் கொண்ட பயிர் ரகங்களின் விதைகள் ரூ.10 கட்டணத்தில் வழங்கப்படும். 10 கிராம் முதல் 100 கிராம் அளவுடைய பைகளில் காய்கறி விதைகள் அடங்கியிருக்கும்.
இக் கருவி, குளிர்பதன சேமிப்பு வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட கால அளவிற்குள், பணம் செலுத்தி விதைகளை எடுக்குமாறு அமைக்கப்பட்டுள்ளது. இக் கருவி 11ம் தேதி முதல் பல்கலைக்கழக தாவரவியல் பூங்கா அருகில் செயல்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு தனி அலுவலர் (விதைகள்), தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோவை என்ற முகவரிக்கோ, 0422-6611232 அல்லது 0422-6611432 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT