Published : 22 Mar 2014 10:33 AM
Last Updated : 22 Mar 2014 10:33 AM

புதுச்சேரி பாஜக கூட்டணியில் தொடரும் குழப்பம்

புதுச்சேரி பாஜக கூட்டணியில் குழப்பம் தொடர்ந்து நீடிக்கிறது. இந்நிலையில் பாஜக அலுவலகத் துக்கு என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகி கள் வெள்ளிக்கிழமை நேரில் சென்று பேசினர். அதேசமயம் புதுச் சேரியில் பாமக போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் பாஜக கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் விவரத்தை தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் சென்னையில் வியாழக்கிழமை அறிவித்தார். புதுச்சேரியை பற்றி அறிவிக்க வில்லை.

என்ஆர்.காங்கிரஸ் கட்சித் தலைவரும், புதுச்சேரி முதல் வருமான ரங்கசாமி ராஜ்நாத் சிங்கை சந்தித்துவிட்டு புதுச்சேரி திரும்பினார். என்ஆர்.காங்கிர ஸாரும், புதுச்சேரி பாஜவினரும் புதுச்சேரி தொகுதியில் பாஜ கூட்டணி சார்பில் என்ஆர்.காங்கிரஸ் போட்டியிடும் என ராஜ்நாத்சிங் அறிவித்துவிட்டதாக தெரிவித்தனர். ஆனால் இதை பாமக உறுதியாக மறுத்து புதுச்சேரியில் கூட்டணி சார்பில் பாமகதான் போட்டியிடும் எனக் கூறியது. இதனால் புதுச்சேரியில் பாஜக கூட்டணியில் குழப்பம் தொடர்கிறது.

இந்நிலையில் வெள்ளிக் கிழமை காலை பாமக மாநில அமைப்பாளரும், வேட்பாளரு மான அனந்தராமன் செய்தியாளர் களிடம் கூறியதாவது: புதுச் சேரியை பொருத்தவரை பாஜக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் இடம்பெறவில்லை. புதுச்சேரி எம்பி தொகுதி தொடர்பாக எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை. தொகுதி பங்கீடு என்பது அனைத்து கூட்டணி கட்சித் தலைவர்களையும் கலந்து பேசி முடிவெடுக்க வேண்டிய விஷயம்.

தற்போது தமிழகத்தில் மட்டும் கூட்டணி முடிவு ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியில் ஓரிரு நாளில் பாஜக கூட்டணி குறித்து முடிவெடுக் கப்படும். பாமக தமிழகத்தில் 8 தொகுதியுடன் புதுச்சேரியையும் சேர்த்து வழங்க வேண்டும் என பாஜ தலைமையிடம் வலியுறுத் தியுள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்பை பாஜக மேலிடம் அறிவிக் கும். புதுச்சேரியில் பாஜக என்ஆர். காங்கிரஸை ஆதரித்தா லும் சரி, ஆதரிக்காவிட்டாலும் சரி எந்த நிலையி லும் புதுச்சேரியில் பாமக போட்டியிடுவது உறுதி. இதற்கான அறிவிப்பை பாமக தலைமை விரைவில் அறிவிக்கும். நாங்கள் மோடி பிரதமராக வேண்டும் என பிரச்சாரம் செய்வோம் என்றார்.

இந்நிலையில் வெள்ளிக் கிழமை நண்பகல் என்ஆர்.காங்கிரஸ் பொதுச்செயலாளர் பாலன் மற்றும் கட்சி நிர்வாகி கள் பாஜக அலுவலகத்துக்கு முதல் முறையாக வந்தனர். பாஜக, என்.ஆர். காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் அப்போது பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதுதொடர்பாக பாஜ தலைவர் விஸ்வேஸ்வரன் கூறியதாவது:

சென்னையில் பாஜக தலைவர் ராஜ்நாத்சிங் புதுச்சேரி தொகுதி அறிவிப்பு தொடர்பாக முதல்வர் ரங்கசாமியையும், பாஜக மற்றும் கூட்டணி தலைவர்களைச் சந்தித் தார். அப்போது பாஜ கூட்டணியில் புதுச்சேரி தொகுதி என்ஆர்.காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது. இதை பாஜ தலைவர் ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.

கூட்டணியில் உள்ள அனைத்து கட்சியினரையும் தேர்தல் பணி ஆலோசனை கூட்டத்துக்கு அழைத்துள்ளோம். இதில் சுமுக முடிவு ஏற்படும். பாஜக கூட்டணி தொடர்பாக தற்போதுதான் பேசுகிறோம். நிச்சயம் வெற்றிபெற பாடுபடு வோம். பாமக தனித்து போட்டி யிடும் என்பது தொடர்பாக கேட்கிறீர்கள். இப்போதுதான் பேச தொடங்கியுள்ளோம். கூட்டணிக்கு சாதகமாக அனைத்தும் நடக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x