Published : 19 Mar 2017 09:31 AM
Last Updated : 19 Mar 2017 09:31 AM

சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்காக 10 ஆயிரம் கி.மீ. சைக்கிள் பயணம்: பொழுதுபோக்குக்காக ஆரம்பித்த பயணம் பொதுநலனுக்காக மாறியது

சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்காக மதுரை சைக்கிள் கிளப் உறுப் பினர்கள் கடந்த 2 ஆண்டுகளில் 10 ஆயிரம் கிமீ தூரம் வரை கிராமங்களை நோக்கி சைக்கிள் களில் சுற்றுப்பயணம் சென்றுள் ளனர்.

இன்றைய அவசரமான உலகத் தில், நடந்து செல்லுதல், சைக்கிள் பயணம் ஆகியவற்றை மறந்த மனி தர்கள் மோட்டார் சைக்கிள், கார் போன்ற வாகனங்களையே அதிகமாக பயன்படுத்துகின்றனர். அதனால், உடற்பயிற்சிக்கு வாய்ப்பே இல்லாமல் போய்விட்ட தால் உடல் ஆரோக்கியம் குறைந்து விதவிதமான நோய்கள் வர ஆரம்பித்துள்ளன.

மதுரையில் 40 இளைஞர்கள் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்காக 4 இடங்களில் சைக்கிள் கிளப்புகள் தொடங்கி கிராமம் கிராமமாக சைக்கிளில் பயணிக்கின்றனர். மதுரை, திண்டுக்கல், தேனி, விருது நகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட மலைக் கிராமங்கள், சுற்றுலாத் தலங்கள், வரலாற்று பாரம்பரியமான இடங்களுக்கு செல்கின்றனர்.

சைக்கிள் பயணத்தில் சந்திக்கும் மக்களிடம் ‘சுற்றுச்சூழலுக்கும், உடல் ஆரோக்கியத்துக்கும் சைக் கிள் பயணம் மிகவும் அவசியம்’, ‘வீட்டுக்கு ஒரு சைக்கிள் பயன் படுத்துவோம்’ என்பன போன்ற விழிப்புணர்வு கருத்துகளை பரப்பு கின்றனர்.

இதுகுறித்து மதுரை பொன்மேனி குட்டிமுத்துகுமார், நாராயணபுரம் எஸ்.சரவணகுமார், எஸ்.எஸ்.காலனி நாகராஜ் ஆகியோர் கூறியதாவது: 2015-ம் ஆண்டு 4 பேருடன் சைக்கிள் கிளப் தொடங்கினோம். தற்போது 40 பேராக இருக்கிறோம். தினமும் காலை 5 மணிக்கெல்லாம் எழுந்து 5.30 மணிக்கு வீட்டில் இருந்து புறப்பட்டுவிடுவோம். 4 அணியாக பிரிந்து, மதுரையில் இருந்து ஒவ் வொரு பாதைகளைத் தேர்ந் தெடுத்து 10 கி.மீ. முதல் 25 கி.மீ. தூரம் சென்று வருவோம்.

பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்புவது, அலுவலகங்களுக்கு செல்வது என ஒவ்வொருவருக்கும் அன்றாட குடும்ப பொறுப்புகள் இருப்பதால் காலை 7 மணிக் கெல்லாம் வீட்டுக்கு வந்துவிடு வோம். வார விடுமுறை நாட்களில் வெளிமாவட்டங்களுக்கு 150 கி.மீ. முதல் 300 கி.மீ. தூரம் வரை செல்வோம்.

ஆரம்பத்தில் பொழுதுபோக் குக்காக சைக்கிள் பயணம் சென் றோம். ஆங்காங்கே எங்களை பார்க் கும் கிராம மக்கள் கேட்டபோது, ஜாலிக்காக செல்கிறோம் என்பதை சொல்ல கூச்சப்பட்டு சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்கு என்று பொய் சொன்னோம். தற்போது அந்த பொய்யே உண்மையாகிவிட்டது. எங்களுடைய சுயநலத்துக்காக ஆரம்பித்த இந்த சைக்கிள் பயணம், தற்போது பிளாஸ்டிக், சீமைக் கருவேல மரம் ஒழிப்பு, இயற்கை விவசாயம், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக செல்லும் பொது நல சைக்கிள் பயணமாக மாறியது.

2 ஆண்டுகளில் 10 ஆயிரம் கி.மீ. தூரம் கிராமங்களில் பயணம் செய்துள்ளோம். இந்த பயணங்களில் உடல் ஆரோக் கியத்துக்கும், சுறுசுறுப்புக்கும் எந்தெந்த வகையில் சைக்கிள் பயணம் உதவுகிறது என்பதை பள்ளி மாணவர்களையும், பொது மக்களையும் சந்தித்து சொல்கி றோம். இதுதவிர செல்லும் கிராமங் களில் மரம் நடும் பணிகளிலும் ஈடுபடுகிறோம். எங்களுடைய இந்த சைக்கிள் பயணம் தன்னம்பிக்கை யுடனும், நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் சுறுசுறுப்பாக இருக்கவும் உதவுகிறது.

சைக்கிள் பயணத்தில் ஒவ்வொரு நாளும் பல புதிய விஷயங்களை கற்றுக்கொள்கிறோம். எங்கள் கிளப்பில் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், வியாபாரிகள், ஓய்வு பெற்ற முதியவர்கள் உள்ளனர். அலுவலகம் தவிர மார்க்கெட், கோயில், நண்பர்களைப் பார்ப் பதற்கு மோட்டார் சைக்கிள்களை ஒதுக்கி வைத்துவிட்டு சைக்கிள் களைத்தான் பயன்படுத்துகிறோம். ஒரு சிலர், அலுவலகங்களுக்குக் கூட சைக்கிளில்தான் செல்கின்றனர் என்றனர்.

சைக்கிள் பயணத்துக்கு தனிப்பாதை அமைக்கப்படுமா?

சைக்கிள் கிளப் நண்பர்கள் கூறும்போது, ‘‘நார்வே, சுவீடன், ஜெர்மன் போன்ற நாடுகளில் 75 சதவீதம் சைக்கிள்களையே பயன்படுத்துகின்றனர். வளர்ந்த, வளரும் நாடுகள், சுற்றுச்சூழல் மாசை தடுக்க சைக்கிளை பயன்படுத்த அந்த நாட்டு மக்களை ஊக்கப்படுத்துகின்றன.

இந்தியாவில் உத்தரப் பிரதேசத்தில் ஆசியாவிலேயே முதல்முறையாக ஆக்ரா முதல் இட்டாவா வரை 207 கிமீ தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலையில் சைக்கிளில் செல்வோருக்காகவே ‘சைக்கிள் வே’(தனிப்பாதை) அமைத்துள்ளனர். அதுபோன்று தமிழகத்திலும் முக்கிய நகரங்களில் தேசிய நெடுஞ்சாலை, நகரச் சாலைகளில் சைக்கிளில் செல்வோருக்காக ‘சைக்கிள் வே’ அமைத்தால் சைக்கிளைப் பயன்படுத்த பலர் முன்வருவர். புகையால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்துவதையும் தடுக்கலாம்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x