Published : 31 Mar 2017 08:11 AM
Last Updated : 31 Mar 2017 08:11 AM
திமுக தலைவர் கருணாநிதி சட்டப்பேரவை உறுப்பினராகி 60 ஆண்டுகள் நிறைவடைவதால் இது அவரது சட்டப்பேரவை வைரவிழா ஆண்டாகும்.
தமிழக அரசியல் வரலாற்றில் யாரும் படைக்காத பல சாதனை களை செய்தவர் திமுக தலைவர் கருணாநிதி. இளம் வயதிலேயே முதல்வராக பதவியேற்றவர், தமி ழகத்தில் 5 முறை முதல்வர் ஆக இருந்தவர் என்ற சாதனைகள் வரிசையில் மற்றொரு சாதனை யையும் நிகழ்த்தி உள்ளார்.
கரூர் மாவட்டம் குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த 1957-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற தேர்தலில் கருணாநிதி, முதல்முறையாகப் போட்டியிட்டு எம்எல்ஏவாக வெற்றி பெற்றார். அதே ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி சட்டப்பேரவை உறுப்பினராகப் பதவியேற்றார்.
அவர் சட்டப்பேரவை உறுப்பின ராகி இன்றுடன் (மார்ச் 31) 60 ஆண்டுகள் நிறைவடைவதால், இது அவரது சட்டப்பேரவை வைரவிழா ஆண்டாகும்.
1957-ல் குளித்தலை, 1962-ல் தஞ்சை, 1967 மற்றும் 1971-ல் சைதாப்பேட்டை, 1977 மற்றும் 1980-ல் அண்ணா நகர், 1989 மற்றும் 1991-ல் துறைமுகம், 1996, 2001 மற்றும் 2006-ல் சேப்பாக்கம், 2011 மற்றும் 2016-ல் திருவாரூர் என 13 சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்டு, தான் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளார்.
எம்எல்சியாக இருந்ததால் கடந்த 1984-ம் ஆண்டு சட்டப்பேர வைத் தேர்தலில் அவர் போட்டி யிடவில்லை. 1991-ம் ஆண்டு திமுக சார்பில் அவர் ஒருவர் மட்டுமே வெற்றி பெற்றதால், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
கடந்த 60 ஆண்டுகளில் 55 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டப்பேரவை உறுப்பினராகவும், 2 ஆண்டுகள் பொதுப்பணித் துறை அமைச்சராகவும், 5 முறை முதல்வராகி 18 ஆண்டுகளுக்கும் மேலாக முதல்வர் பதவியையும் வகித்துள்ளார்.
கடந்த திமுக ஆட்சியின்போது 2007-ம் ஆண்டு அவரது சட்டப் பேரவை பொன்விழா ஆண்டை யொட்டி, கரூர் மாவட்டம் குளித்தலையில் சட்டப்பேரவை பொன்விழா வளைவு அமைக்கப் பட்டதுடன், கலைஞர் பொன்விழா அரசு கலைக் கல்லூரி தொடங் கப்பட்டது என்பதும் குறிப்பிடத் தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT