Published : 20 May 2017 08:43 AM
Last Updated : 20 May 2017 08:43 AM
ஒரு குழுவில் 21 சிறுவர், சிறுமியர். அவர்கள் அனைவரும் பாராளு மன்ற உறுப்பினர்கள். அவர்களில் பிரதமர் உள்பட 11 பேர் அமைச் சர்கள். மாதத்தில் கடைசி சனிக் கிழமை கூடுகின்றனர். நாட்டு நடப்புகள் பேசி சில முடிவுகளை எடுக்கின்றனர். அவற்றில் எத்தனை முடிவுகளை செயல்படுத்தினோம் என்று அடுத்த கூட்டத்தில் விவாதிக்கின்றனர். இப்படி, 35 குழந்தைகள் பாராளுமன்றங்கள் திருப்பூர் அண்ணாநகர், பாண்டிய நகர் பகுதிகளில் இயங்குகின்றன.
இதன் உச்சநிகழ்வாக, குழந் தைத் தொழிலாளர்கள் இல்லாத கிராமங்களாக இப்பகுதிகள் அறி விக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்வு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருப்பூர் ஹோட்டல் ஒன்றில் திண் டுக்கல் எம்.பி., திருப்பூர் காவல் துறை துணை ஆணையர் முன்னிலையில் அரங்கேறி உள்ளது. இதை செய்தவர்கள் திருப்பூர் ‘சேவ்’ அமைப்பினர். இது குறித்து இந்தப் பணியில் ஈடுபடும் தன்னார்வலர்கள் கூறியதாவது: குழந்தை தொழிலாளர்களை மீட்டு பள்ளியில் சேர்க்கும் பணியை 20 ஆண்டுகளுக்கும் மேலாக செய்கிறோம். அதில் ஒன்றாக ‘சைல்டு லேபர் ஃபிரீ ஜோன்’ என்ற இந்தப் பணியை 3 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்தோம். 2 வார்டுகளைத் தேர்ந்தெடுத்து 16 தன்னார்வலர்கள் களம் கண்டனர். மொத்தம் 2964 வீடுகளில் 5252 குடும்பங்கள், அதில் 18 வயதுக்கு உட்பட்ட 6 ஆயிரம் குழந்தைகள் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த திட்டம் குறித்த விழிப்புணர்வு உள்ளூர் கவுன்சிலர்கள், அரசியல் பிரமுகர்கள், வணிகர்கள், சிறு, குறு தொழிற்சாலை உரிமையாளர்கள், ரசிகர் மன்றங்கள், பொதுநல அமைப்பினர் மத்தியில் கொண்டுசெல்ல வாரந்தோறும் அவர்களுக்கென கூட்டங்கள் கூட்டப்பட்டன. அதில் அவர்களி லேயே 130 பேர் தன்னார்வலர்கள் இப்பணியில் சேர்ந்தனர். வேலைக் குச் செல்லும் குழந்தைகளைத் தடுத்து பள்ளியில் சேர்க்க ஏற்பாடு செய்தனர்.
29 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் உதவியு டன் மாணவர் வருகைப் பதி வேடு கண்காணிக்கப்பட்டது. அதில், 80 சதவீதம் வருகைக்கு குறைவான குழந்தைகளின் பெற் றோரை அணுகினோம். இடை நிற்றல் இன்றி பள்ளிக்குச் செல்லுமாறு அவர்களைப் பார்த்துக் கொண்டோம்.
வட மாநிலத்திலிருந்து வரும் வேற்று மொழி குழந்தைகளுக்கு தமிழ் - ஹிந்தி ஆசிரியரை அமர்த்தி அடிப்படை கல்வி புகட்டி அருகில் உள்ள பள்ளிகளில் சேர்க்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் பிறகு ஒவ்வொரு பகுதிகளிலும் குழந்தைகளிடம் அரசியல் அறிவை வளர்க்க குழந்தைகள் பாராளுமன்றங்கள் உருவாக்கப்பட்டன. இப்போது குழந்தைகளே அங்குள்ள மக்கள் பிரச்சினையை கவனிக்கின்றனர்.
ஒரு பகுதியில் கொசுத் தொல்லை, சாக்கடை சுத்தம் செய்யவில்லை என்றால் விண்ணப் பம் எழுதி உள்ளூர் அதிகாரிகளிடம் கொடுக்கின்றனர். அதைப்பற்றி அடுத்த கூட்டத்தில் பேசுகின்றனர். இதுவெல்லாம் நிறைவான பின்பே உள்ளூர் பிரமுகர்களும் ஒப்புதல் அளித்த பிறகுதான் ஒரு விழா ஏற்பாடு செய்து 2 வார்டுகளும் குழந்தைத் தொழி லாளர்கள் இல்லாத கிராமமாக அறிவிக்கப்பட்டது என்றனர்.
இதுகுறித்து ‘சேவ்’ அமைப்பின் இயக்குநர்கள் அலோசியஸ், வி. வியாகுலமேரி ஆகியோர் கூறும்போது, ‘தற்போது உருவாக்கப்பட்டுள்ள குழந்தை தொழிலாளர் இல்லாத கிராமங்கள், தொடர்ந்து அதேநிலையில் மேம்பட தன்னார்வலர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அடுத்ததாக, திருப்பூரில் கே.வி. நகர் (27-வது வார்டு), எம்.எஸ்.நகர் (56வது வார்டு) ஆகிய 2 பகுதிகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ள களப்பணிகள் 6 மாதங்களாக முடுக்கி விடப் பட்டுள்ளன.
திருப்பூர் முழுமையும் குழந்தைத் தொழிலாளர் இல்லாத கிராமங்களை உருவாக்குவதுதான் எங்கள் நோக்கம்’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT