Published : 03 Feb 2016 10:43 AM
Last Updated : 03 Feb 2016 10:43 AM
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என பல்வேறு தரப்பினரும் தங்களது கோரிக்கைகளை முன் வைத்து போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
தேர்தல் நேரத்தில் நடைபெறும் இந்த போராட்டங்கள் அரசுக்கு அளிக்கும் நெருக்குதலா அல்லது தங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றிடும் என்ற எதிர்பார்ப்பா என்பது தான் பொதுமக்களிடையே தற்போது சூடான விவாதப் பொரு ளாகியுள்ளது.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை விரைவில் அறி விப்பதற்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. அரசியல் கட்சிகளும் தேர் தலில் போட்டியிட விரும்பும் தங்களது கட்சியினரிடம் இருந்து விருப்ப மனுக்களைப் பெறும் பணியைத் தொடங்கி விட்டன.
சில கட்சிகள் கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகள், பேரங்களை ரகசியமாக மேற்கொண்டு வருகின்றன. மேலும், தங்களது தொண்டர்களை தேர்தல் பணியாற்ற ஊக்குவிக்கும் கூட்டங்களையும் கட்சிகள் நடத்தி வருகின்றன.
இந்தநிலையில், தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என பல்வேறு தரப்பினரும் தங்க ளது கோரிக்கைகளை நிறைவேற்ற அரசை வலியுறுத்தும் வகையில் ஆர்ப்பாட்டம், வேலைநிறுத்தம், மறியல், முற்றுகை என போராட் டங்களை தீவிரப்படுத்தியுள்ளனர்.
ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மறியல், முற்றுகைப் போராட்டங்கள் நடத் தப்பட்டு, கைது நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
மக்கள் நலப்பணியாளர்கள்
திமுக ஆட்சியில் பணியில் அமர்த்தப்பட்டு கடந்த அதிமுக ஆட்சியிலேயே பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்கள் தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டுமென வலியுறுத்தி போராட்டத்தை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தி வருகின்றனர். இதேபோன்று வருவாய்த் துறை ஊழியர் சங்கத்தினர் தங்களது 21 அம்சக் கோரிக்கைகளை வலி யுறுத்தி 2 நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை பிப்.2-ம் தேதி தொடங்கியுள்ளனர்.
இதுகுறித்து அகில இந்திய மாநில அரசுப் பணியாளர் மகா சம்மேளனத்தின் பொதுச் செயலா ளர் கு.பாலசுப்பிரமணியன் ‘தி இந்து’ விடம் கூறியதாவது:
தமிழக அரசு நாள்தோறும் புதிய திட்டங்களை அறிவித்து வருகிறது. ஆனால், இந்த திட்டங்களை நடைமுறைப்படுத்தும் அரசு ஊழியர் களின் நலன்களை, கோரிக்கை களை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணமே துளியும் இல்லா மல் செயல்படுகிறது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி யும் அரசு இதுவரையில் நிர்வாகி களை அழைத்துப் பேசி நியாயமான கோரிக்கைகளை கூட நிறைவேற்ற முன்வரவில்லை.
அதனால், தேர்தல் நெருங்கும் நேரத்திலாவது தங்களது கோரிக் கைகளை அரசு நிறைவேறும் என்ற எதிர்பார்ப்போடு தான் போராட்டங்களை நடத்தி வருகிறோம். கோரிக்கை கள் நிறைவேறும் என்ற நம்பிக்கை யோடு தான் இருக்கிறோம். கோரிக் கைகள் நிறைவேறாவிடில் அரசுப் பணியாளர்கள் உரிய முடிவை எடுப்பார்கள் என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT