Last Updated : 26 Feb, 2014 12:00 AM

 

Published : 26 Feb 2014 12:00 AM
Last Updated : 26 Feb 2014 12:00 AM

சாலைகளுக்கு இந்தியர் அல்லாதோர் பெயர்களை மாற்ற சென்னை மாநகராட்சி தீவிரம்

சென்னையில் இந்தியர் அல்லாத வர்களின் பெயரில் அழைக்கப்படும் சாலைகளின் பெயர்களை மாற்றுவதற்கான நடவடிக்கையில் சென்னை மாநகராட்சி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

சென்னை மாநகராட்சி பகுதி களில் ஸ்ட்ராஹன்ஸ் சாலை, டிகாஸ்டர் சாலை, ஸ்டீபன் சாலை, பின்னிசாலை, குக்ஸ் சாலை, ஹீட்டன் சாலை என, இந்தியர் அல்லாதவர்களின் பெயர்களில் பல சாலைகள் அழைக்கப்படுகின்றன.

இப்படி, இந்தியர் அல்லாத வர்களின் பெயர்களில் அழைக் கப்படும், மெளண்ட் ரோடு, கிரீன் வேஸ் ரோடு, ஹாரிஸ் ரோடு உள்ளிட்ட சாலை பெயர்கள் முறையே அண்ணா சாலை, பசுமை சாலை, ஆதித்தனார் சாலை என தமிழர்கள், தமிழ்ப் பெயர்களாக ஏற்கெனவே மாற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில், சென்னை மாநகராட்சியின் 2014-15-ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை கடந்த 19-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, ‘`இந்தி யர் அல்லாதவரின் பெயரில் அழைக்கப்படும் சாலைகளின் பெயர்களை மாற்றி, புதிய நல்ல பெயர்களை சூட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’’ என, மேயர் சைதை துரைசாமி அறிவித்தார்.

இதையடுத்து, தற்போது, இந்தியர் அல்லாதவர்களின் பெயரில் அழைக்கப்படும் சாலை களின் பெயர்களை மாற்று வதற்கான நடவடிக்கையில் சென்னை மாநகராட்சி தீவிரமாக ஈடுபட்டுவருகிறது.

இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:

2014-15-ம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில், இந்தியர் அல்லாதவர்களின் பெயரில் அழைக்கப்படும் சாலைகளின் பெயர்கள் மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, முதல் கட்டமாக, மாநகராட்சி வருவாய்த் துறை மூலம், இந்தியர் அல்லாதவர்களின் பெயரில் உள்ள சாலைகளின் பட்டியல் கடந்த சில நாட்களாக தயாரிக்கப்பட்டு வருகிறது. அப்பணி இன்னும் சில நாட்களில் முடிவு பெறும். அதன் பிறகு, பெயர் மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x