Published : 05 Nov 2014 11:19 AM
Last Updated : 05 Nov 2014 11:19 AM

அழிவின் விளிம்பில் சிற்பக் குளம்: பாதுகாக்க வரலாற்று ஆர்வலர்கள் கோரிக்கை

திருவண்ணாமலை மாவட்டம் தண் டராம்பட்டு என்ற ஊரில் இருந்து ஒன்றரை கி.மீ தொலைவில் கீழ்ராவந்தவாடி என்ற கிராமத்தில் உள்ள சிற்பக் குளம் புதர்கள் மண்டி, சிற்பங்கள் பதிக்கப்பட்ட கற்கள் பெயர்க்கப்பட்டு சிதில மடைந்து அலங்கோலமாக காட்சியளிக்கிறது.

16-ம் நூற்றாண்டு

இதுகுறித்து வரலாற்று ஆர்வலர் தமிழ்செல்வன் கூறும்போது, “குளத்தில் சிற்பங்களை செதுக்கி வைப்பது என்பது 16-ம் நூற்றாண் டில் நாயக்கர் மன்னர்கள் காலத் தில் நடைமுறையில் இருந்தது. அவர்கள் ஆட்சி செய்த, தண்ட ராம்பட்டு வட்டம் சின்னையன் பேட்டை கிராமத்தில் உள்ள குளத்தில் அக்காட்சிகளை காண லாம். அவர்கள் இரு குளங்களை வடிவமைத்துள்ளதாக வரலாறு கூறுகிறது. ஒன்று மட்டும் கண்டெடுக் கப்பட்டு, தமிழக தொல்லி யல் துறை பாதுகாக்கிறது. மற் றொரு குளம் தேடப்பட்டு வந்த நிலையில், கீழ்ராவந்தவாடி கிராமத் தில் இருப்பது தெரியவந்தது.

சிற்பங்களின் அதிசயம்

ராமயாணம், மகாபாரதம், பெரிய புராண காட்சிகள், கலவி மற்றும் புணர்ச்சி சார்ந்த பல்வேறு நிலை சிற்பங்கள், சிவபெருமானை கண்ணப்ப நாயனார் வணங்கும் காட்சிகள், போர்க் காட்சிகள், மூன்று நிலைகளில் உள்ள படிக்கட்டுகளில் விலங்குகள் மற்றும் மதம் பிடித்த யானையை ஒரு மாவீரன் அடக்குவது போன்ற புடைப்பு சிற்பங்கள், அக்குளத்தில் பதிக்கப்பட்டுள்ளன. மேலும், குளத்தின் நான்கு வழிகளின் நுழைவு வாயில்களில் 8 நந்திகள் மற்றும் நான்கு திசைகளில் 4 நந்திகள் இருந்திருக்க வேண்டும். ஆனால், ஒன்றுமட்டும் சேதமடைந்த நிலையில் உள்ளது.

புடைப்புச் சிற்பங்கள் பதிக் கப்பட்ட மூன்று நிலை படிக்கட்டுகள் பெயர்க்கப்பட்டு உள்ளன. புதர்கள் மண்டிக் கிடக்கிறது. வரலாற்றுச் சுவடு குறித்த பெருமை அறியப் படாததால், அழிவின் விளிம்புக்கே சென்றுவிட்டது. அவை பாது காக்கப்பட வேண்டும். கீழ்ராவந்த வாடி சிற்பக் குளத்தை மீட்டு தொல்லியல் துறை பாதுகாக்க வேண்டும்” என்றார்.

சமூக ஆர்வலர் ரமணஜோதி கூறும்போது, “தண்டராம்பட்டு கிராமத்தில் வசிப்பதால், கீழ்ராவந்தவாடி சிற்பக் குளத்தை 1972-ல் பார்த்துள்ளேன். பெரிய மலையில் இருந்து காட்டு ஓடை வழியாக வரும் தண்ணீர், சிற்பக் குளத்தில் நிரம்பி தண்டராம்பட்டு ஏரிக்கு செல்லும். சிற்பக் குளத்தின் பெருமைகள் தெரியவந்ததும், அதனை சீரமைக்கும் முயற்சியை கிராம மக்கள் உதவியுடன் மேற் கொண்டுள்ளேன். புதர்கள் மற்றும் முள் செடிகளை அகற்றும் பணி நடைபெறுகிறது. இதுதொடர்பாக வரலாற்று ஆய்வாளர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளேன். குளத்துக்குச் சொந்தமான இடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. குளத்துக்கு வரும் நான்கு வழிகளும் மறைக்கப்பட்டுவிட்டன. குளத்தை பாதுகாக்க ஆட்சியர் அ.ஞானசேகரன் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x