Published : 26 Jul 2016 08:17 AM
Last Updated : 26 Jul 2016 08:17 AM
கல்விக்கடனை வசூலிக்க பொது இடத்தில் புகைப்படத்துடன் ஃபிளக்ஸ் போர்டு வைத்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட மாணவிக்கு ரூ.1 லட்சம் இழப்பீட்டை சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி வழங்கியது.
நீலகிரி மாவட்டம் மஞ்சூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரி நீத்து. இவர் தனது பொறியியல் படிப்புக்காக மஞ்சூரில் உள்ள சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிக் கிளையில் 2009-ல் ரூ.2 லட்சம் கல்விக்கடன் பெற்றார். அதில் ரூ.1 லட்சத்தை 2014 ஜூலையில் திருப்பிச் செலுத்தினார். ஆனாலும், கல்விக் கடனை திருப்பிச் செலுத்தும்படி வங்கி நிர்வாகம் 2015 ஜனவரியில் தெரிவித்தது. நீத்து மற்றும் அவரது பெற்றோரின் புகைப்படங்களுடன் பொது இடங்களில் ஃபிளக்ஸ் போர்டையும் வங்கி நிர்வாகம் வைத்தது.
இதுதொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், தேசிய மனித உரிமைகள் ஆணையத்துக்கு கல்விக்கடன் விழிப்புணர்வு இயக்கம் கடிதம் எழுதியது. அதையே வழக்காக எடுத்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரித்தது. டேட்டா என்ட்ரியில் நடந்த தவறால் நீத்துவின் பெயர் வாராக் கடன் பட்டியலில் சேர்க்கப்பட்டுவிட்டதாக கூறிய வங்கி நிர்வாகம், அதற்காக நீத்துவிடம் வருத்தம் தெரிவித்துக்கொண்டது.
இதை ஏற்காத மனித உரிமைகள் ஆணையம், கவுரவமாக வாழும் உரிமையைப் பறித்து மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக மாணவி நீத்துவுக்கு 6 வாரத்துக்குள் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்குமாறு வங்கி நிர்வாகத்துக்கு கடந்த ஜூன் 23-ம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து, நீத்துவை வங்கி அதிகாரிகள் நேரில் அழைத்துப் பேசி, அவரிடம் ரூ.1 லட்சத்துக்கான வரைவோலையை வழங்கினர்.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் நீத்து கூறியதாவது:
வரைவோலையை வழங்கிய வங்கி அதிகாரிகள், இப்படி ஒரு தவறு நடந்திருக்கக் கூடாது என்று கூறி, நடந்த தவறுக்காக வருத்தம் தெரிவித்துக் கொண்டனர். எங்கோ ஒரு கிராமத்தில் இருக்கும் எனது பிரச்சினையையும் கவனத்தில் எடுத்து நியாயமான தீர்ப்பு வழங்கிய தேசிய மனித உரிமை கள் ஆணையத்துக்கும், என் பிரச் சினையை ஆணையம் வரை எடுத்துச் சென்ற கல்விக்கடன் விழிப் புணர்வு இயக்கத்துக்கும் நன்றி.
நமக்கு பிரச்சினை ஏற்பட்டால், பெரும்பாலும் அதை உரிய இடத்துக்கு எடுத்துச் செல்வதில்லை. தவிர, நம் பிரச் சினைகளை தீர்த்துவைக்க, அதற்கான முயற்சிகள் எடுக்க நிறைய தன் னார்வ அமைப்புகள் இருக்கின்றன. இதை உணராமல், கல்விக்கடன் நெருக் கடி என்று மதுரை மாணவர் தற் கொலை செய்துள்ளார். பிரச்சினைக்கு இது தீர்வல்ல என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். பிரச்சினை களை துணிச்சலோடு எதிர்த்து நின்று போராடி வெற்றி பெறவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT