Published : 13 Jul 2016 08:21 AM
Last Updated : 13 Jul 2016 08:21 AM
திண்டிவனம், சஞ்சிவிராயன் பேட்டையில் வசிப்பவர் குப்பு சாமி(74). ஹோமியோபதி மருத் துவரான இவரின் மொபைலுக்கு கடந்த 5.12.2015 அன்று ஒரு எஸ்எம்எஸ் வந்துள்ளது. அதில், ‘லேண்ட் ரோவர் மோட்டார்ஸ் அவார்டில் உங்கள் எண் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 3.35 கோடி மதிப்புள்ள இங்கிலாந்து நாட்டில் தயாரிக்கப்பட்ட லேண்ட் ரோவர் கார் பரிசு விழுந்துள்ளது. உடனே தொடர்புகொள்ளவும்’ என கூறப் பட்டுள்ளது.
உடனே எஸ்எம்எஸ் வந்த எண்ணுக்கு தொடர்புகொண்டு பேசியுள்ளார். அதன் பின் claimsofficeindia@gmail.com, claimsunit93@gmail.com என்ற மின்னஞ்சல்களில் இருந்து குப்பு சாமிக்கு மெயில் வந்துள்ளது. அதில், இந்த காரை பெறுவதற்கு இறக்குமதி கட்டணமாக ரூ.25 ஆயிரத்தை டெல்லி கனரா வங்கியில் தீபக்குமார் என்ற பெயரில் செலுத்துங்கள் என்று தெரிவித்து, வங்கியின் விவரங் களை அனுப்பியுள்ளனர். இதைத் தொடர்ந்து 2015 டிசம்பர் 16-ம் தேதி முதல் சிறிது சிறிதாக ரூ.3 லட்சத்து 6 ஆயிரத்தை குப்புசாமி செலுத்தியுள்ளார்.
கடந்த 5-ம் தேதி கார் பரிசளிப்பவர்களை நேரில் சந்திக்க குப்புசாமி, டெல்லிக்கு சென்று 10-ம் தேதி திண்டிவனம் திரும்பினார்.
இதுகுறித்து குப்புசாமியிடம் கேட்டபோது, “கடந்த 6-ம் தேதி டெல்லிக்கு சென்ற நான், வினித் என்பவரை தொடர்புகொண்ட போது இந்திராகாந்தி விமான நிலையத்துக்கு வரச் சொன்னார். அங்கு சென்று பார்த்தபோது அவர் வரவில்லை. 8-ம் தேதி காலை வினித் செல்போன் அணைத்து வைக்கப்பட்டு இருந்த தால், ஊருக்கு திரும்பி வந்துவிட் டேன். நான் அவர்களுக்கு பணம் செலுத்திய விவரம் அனைத்தும் உள்ளது. இதுதொடர்பாக விழுப் புரம் எஸ்பி-யை சந்தித்து புகார் கொடுக்க உள்ளேன்” என்றார். என்னைப் போல இனி யாரும் ஏமாறக்கூடாது” என்றார்.
ஹோமியோபதி மருத்துவ ரான குப்புசாமி, 2013-ம் ஆண்டு தமிழ் இலக்கியத்தில் ‘மலரும் மருந்தும்’ என்ற நூல் எழுதியுள்ளார். இவரின் மகள்கள் செந்தமிழ் செல்வி, தேன்மொழி, செம்பியன் அனைவரும் சித்த மருத்துவர்களாக பணியாற்றி வருகின்றனர். குப்புசாமி அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி, அதன் பிறகு ஹோமியோபதி பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT