Published : 22 Mar 2014 11:35 AM
Last Updated : 22 Mar 2014 11:35 AM
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுபவர்களுக்கான பட்டியலில் இடம்பெற்றுள்ள இளம் வேட்பாளர்களில் முக்கியமானவர் மோகன் குமாரமங்கலம். 35 வயது நிரம்பிய இவர், சேலம் மக்களவைத் தொகுதியில் களம் இறங்குகிறார்.
சிகாகோவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக் கழகத்தில் இளங்கலைப் பொறியி யல் பட்டமும், மாசசூசெட்ஸ் பல் கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பட்டமும் பெற்ற இவர், தமிழக அரசியலில் காலம் காலமாக ஈடு பட்டு வந்த புகழ்மிக்க குமாரமங்க லம் குடும்பத்தின் இளைய வாரிசு. இந்திய அரசியலில் நேரு குடும்பத்தினருக்குப் பிறகு தலை முறை தலைமுறையாக அரசிய லில் ஈடுபட்டுவரும் குடும்பம் என்ற பெருமை குமாரமங்கலம் குடும்பத்தினருக்கு உண்டு.
தாத்தா முதல் பேரன் வரை அனைவருமே சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்கள். அரசியலுக்கு வந்ததும் தங்களுடைய சொத்துகளை மக்களுக்கு வழங்கிவிட்டனர்.
குமாரமங்கலம் சேலத்துக்கு அருகிலுள்ள ஒரு ஜமீன். அதன் வாரிசான டாக்டர் பி. சுப்பராயன் சென்னை மாகாணத்தின் முதல்வ ராக இருந்தவர். சுப்பராயனுடைய மகன் மோகன் குமாரமங்கலம் தமிழகத்தின் கம்யூனிஸ்ட் இயக் கத்தின் முன்னோடித் தலைவர் களில் ஒருவர். பின்னாளில் அவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து இந்திரா காந்தி தலைமையிலான அரசில் அமைச்சராகப் பணியாற்றி னார். அவருடைய மகன் ரங்க ராஜன் குமாரமங்கலம். காங்கிர சில் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய அவர், பின்னர் பார திய ஜனதாவில் சேர்ந்து அமைச்ச ரானார். அரசியலில் ஈடுபட்டு குறு கிய காலத்திலேயே காலமானார்.
"நான் அமெரிக்காவிலிருந்து வந்து 6 மாதம்தான் என் தந்தை யுடன் சேர்ந்து வாழ்ந்தேன். அதற் குள் அவர் காலமாகி விட்டார்" என்று தனது தந்தையைக் குறித்து நினைவு கூர்ந்தார் மோகன் குமாரமங்கலம். பெயரை நிலை நிறுத்துபவன் பேரன் என்பது தமிழகத்தின் சொல்வழக்கு. தாத்தா மோகன் குமாரமங்கலத் தின் பெயர் அவருக்குச் சூட்டப் பட்டுள்ளது.
மோகனின் கொள்ளுத் தாத்தா சுப்பராயன், தாத்தா மோகன் குமாரமங்கலம், அப்பா ரங்க ராஜன் குமாரமங்கலம் அனை வருமே மத்தியில் அமைச்சர்களாக இருந்தவர்கள். அத்துடன் இந்திய அரசியலில் கட்சி மாறி அரசியல் நடத்தியவர்களும் இவர்களே.
மோகன் குமாரமங்கலம் லண்ட னில் பாரிஸ்டர் பட்டம் பெற்று இந்தியாவின் மிகச்சிறந்த வழக்கறி ஞர்களுள் ஒருவராகத் திகழ்ந்த வர். அண்மையில் காலமான அவருடைய சகோதரி பார்வதி கிருஷ்ணனும் மோகன் குமாரமங் கலமும் கம்யூனிஸ்ட் கட்சியில் பணியாற்றினர். பின்னர் காங்கிர ஸில் சேர்ந்து அமைச்சரான மோகன் குமாரமங்கலம், 1973-ம் ஆண்டு நிகழ்ந்த விமான விபத்தில் காலமானார்.
ரங்கராஜன் குமாரமங்கலமும் சிறந்த வழக்கறிஞர். தொழிற்சங்கவாதி. சேலம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு ராஜீவ் காந்தியின் அமைச்சரவையில் உறுப்பினராக இருந்தவர். பின்னர் காவிரிப் பிரச்சினையில் கருத்து வேறுபாடு காரணமாக திவாரி காங்கிரசில் இணைந்தார். பின்னர் பாஜகவில் சேர்ந்து திருச்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சராகி, குறுகிய காலத்திலேயே திறமையான நிர்வாகி எனப் பெயர் பெற்றார்.
தான் பார்த்து வந்த பணியை உதறிவிட்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாக இந்தியா திரும்பிய மோகன், சேலத்தில் தங்கி பணியாற்ற ஆரம்பித்தார். "மாதத்தில் இருபது நாட்கள் அங்கிருந்து பணியாற்றி னேன். கடந்த ஓராண்டுக்கு முன்னால் காங்கிரஸ் கட்சி யில் சேர்ந்து, இளைஞர் காங்கிர சில் பணியாற்றி, சேலம் மக்கள வைத் தொகுதியின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டேன்" என்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT