Published : 17 Feb 2017 11:22 AM
Last Updated : 17 Feb 2017 11:22 AM

வெண்பன்றி வளர்ப்பு தொழிலில் சாதிக்கும் காரைக்குடி இளைஞர்: குறைந்த செலவில் அதிக லாபம் தரும்

படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லையே என சோர்வடையாமல், வெண்பன்றி வளர்ப்புத் தொழிலில் ஈடுபட்டு இளைஞர்களுக்கு முன்னு தார ணமாக திகழ்கிறார் காரைக் குடியை சேர்ந்த மா.உதயமுத்து.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்தவர் மா.உத யமுத்து (28). இவர், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி. (கணிதம்) படித்துள்ளார். படித்து முடித்த பின்பு வேலை கிடைக்கவில்லையென சோர்வடையாமல் வெண்பன்றி வளர்த்து லாபம் ஈட்டி வருகிறார். தன்னைப்போல ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு வழிகாட்டி வருகிறார்.

இதுகுறித்து மா.உதயமுத்து கூறியதாவது:

சிறு வயதிலிருந்தே கால்நடை வளர்ப்பில் ஆர்வம் இருந்தது. எனவே, படித்து முடித்ததும் எனது பெரியப்பாக்கள் பொறியாளர் முத்தையா, பேச்சியப்பன் வழி காட்டுதலில் வெண்பன்றி வளர் ப்பில் ஈடுபட்டேன். இதற்காக, சென்னை காட்டுப்பாக்கத்திலும், குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்திலும் பயிற்சி பெற்றேன்.

காரைக்குடி அருகே சின்னவா குடிபட்டியில் 2013-ல் பண்ணையை அமைத்தேன். தற்போது அதை கல்லல் பகுதிக்கு மாற்றியுள்ளேன். திருச்சி விளாம்பட்டி, செட்டிநாடு கால்நடைப் பண்ணை, தாராபுரம் பண்ணையில் தரமான வெண்பன்றி குட்டிகளை வாங்குகிறோம்.

வெண்பன்றி இறைச்சிக்கு கேரளாவில் நல்ல வரவேற்பு உள்ளதால், அங்கு அதிக அளவில் வெண்பன்றிகளை அனுப்பி வருகிறோம். எனது பண்ணையில் 4 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்துள்ளேன். திருச்சி அரசு விடுதிகளில் இருந்து உணவுக் கழிவுகளை கொண்டு வந்து வெண்பன்றிக்கு இரையாக வழங்குகிறேன். குட்டியாக வாங்கி ஆறுமாதத்தில் வளர்த்து விற்கலாம். 100 குட்டிகளுக்கு ஒரு நாள் ரூ.1,500 செலவாகும். 6 மாதங்களுக்கு ரூ. 3 லட்சம் செலவாகும். செலவெ ல்லாம் போக ரூ. 3 லட்சம் லாபம் கிடைக்கும். இத்தொழிலில் ஈடுபட விரும்பும் இளைஞர்களை பண்ணைக்கு அழைத்து ஆலோசனை வழங்கு கிறேன். வெண்பன்றி இறைச்சியால் ஏற்படும் நன்மைகள் குறத்து குறித்து அரசு விழிப்புணர்வு ஏற்படு த்த வேண்டும். இத்தொழிலில் ஈடுபடுவோருக்கு பாதுகாப்பு அளி க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

வெண்பன்றி வளர்ப்பு பற்றி தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலைய தலைவர் செந்தூர்குமரன், கால்நடை உதவிப் பேராசிரியர் குமரவேல் ஆகியோர் கூறி யதாவது: வெண்பன்றி வளர் ப்பு, லாபகரமான தொழில். வெண் பன்றிகள் வேகமாக வளரும் திறன் கொண்டவை. ஒரு நாளில் 300, 400 கிராம் வரை எடை கூடும். 7, 8-வது மாதத்தில் 100 கிலோ எடை அதிகரிக்கும். ஒரு வருடத்தில் 2 முறை தலா 8 முதல் 12 குட்டி ஈனும். காய்கறி, கோழி, மீன் இறைச்சிக் கழிவுகள், விடுதி, சமையல்கூடக் கழிவுகளை உண்டு வளரும். இதனால் வெண்பன்றிக்கான உணவு செலவு குறைவு. இதன் கழிவுகள் இயற்கை உரமாக பயன் படுத்தப்படுகிறது.

பொதுவாக இறைச்சிகளில் மோனோ கரைநிலை சாக்ரைடு, பாலி கரைநிலை சாக்ரைடு என இருவகை கொழுப்பு உள்ளன. மோனோ கரைநிலை சாக்ரைடு உடல் திசுக்களின் மீது அதிகமாக படியும். ஆனால், பாலி சாக்ரைடு கொழுப்பு திசுக்களின் மீது குறைவாக படியும். வெண்பன்றி இறைச்சியில் பாலி சாக்ரைடு கொழுப்பு அதிகமாக உள்ளது. எனவே, மேலைநாட்டினர் வெண்பன்றி இறைச்சியை விரும்பி சாப்பிடுகின்றனர். இதன் தோலை ஒட்டியுள்ள வார் எனும் கொழுப்புமிகு இறை ச்சியை தனியாகப் பிரித்தும் விற்க ப்படுகிறது. இதனை சாப்பிடுவதால் மூல நோ ய்களுக்கு மருந்தாகவும் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்

மா.உதயமுத்து

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x