Published : 05 Jan 2016 09:00 AM
Last Updated : 05 Jan 2016 09:00 AM
சென்னை, காஞ்சிபுரம் மாவட்ட கடலோரப் பகுதிகளில் கடல் ஆமை முட்டைகள் சேகரிப்பு பணியை வனத்துறை தொடங்கி யுள்ளது. இப்பணியில் 1,200-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
உலகில் 60 சதவீதம் பேர் கடலில் உள்ள மீன் வளத்தை சார்ந்து வாழ்கின்றனர். கடலில் இருக்கும் ஜெல்லி மீன்கள் சிறிய மீன் குஞ்சுகளை உணவாக உண்டு, மீன் வளத்தை அழிக்கின்றன. இந்த ஜெல்லி மீன்களை கடல் ஆமைகள் உண்டு வாழ்வதால், மீன் வளத்தை பெருக்கும் சக்தியாக இருக்கிறது. மீனவர்களின் நண்பனாகவும் திகழ்கிறது. மீன் களுக்கு உணவாகும் பவளப் பாறைகளில் வளரும் பாசிகள் பெருக்கத்துக்கும் உதவி புரிகின்றன.
கடல் ஆமைகள் ஆண்டு தோறும் டிசம்பர் முதல் ஏப்ரல் முதல் வாரம் வரை கடலோரப் பகுதிக்கு அதிகாலை நேரங்களில் வந்து முட்டையிடும். இம்முட்டைகளை நாய்கள், பறவைகள் சிதைத்துவிடுவதால், அழிந்து வரும் உயிரினங்கள் பட்டியலில் கடல் ஆமைகள் உள்ளன. எனவே, அழிந்துவரும் கடல் ஆமைகளை பாதுகாக்கும் விதமாக, பெசன்ட்நகர் உள்ளிட்ட 3 இடங்களில் 3 ஆண்டுகளுக்கு முன்பு, வனத்துறை சார்பில் ஆமை குஞ்சு பொரிப்பகங்கள் அமைக்கப்பட்டன.
டிசம்பர் முதல் ஏப்ரல் வரையில் மெரினா, பெசன்ட் நகர், கோவளம் ஆகிய கடலோரப் பகுதியில் தன்னார்வலர்களுடன் வனத்துறையினர் இரவு நேரங்களில் ரோந்து சென்று ஆமை முட்டைகளை சேகரித்து, குஞ்சு பொரிப்பகத்துக்கு அனுப்புகின்றனர். அங்கு 45 நாட்கள் அடைகாத்தலுக்கு பிறகு வெளிவரும் ஆமை குஞ்சுகள், மீண்டும் கடலில் விடப்படும்.
இந்நிலையில், இந்த பருவத்துக்கான முட்டை சேகரிப்பு பணி கடந்த சில நாட்களாக நடந்துவருகிறது. இதுகுறித்து கேட்டதற்கு, சென்னை வனச்சரக அலுவலர் (வன உயிரினம்) எஸ்.டேவிட்ராஜ் மேலும் கூறியதாவது:
வழக்கமாக கடல் ஆமைகள் டிசம்பரில் முட்டையிடத் தொடங் கும். சமீபத்திய மழை, வெள் ளம் காரணமாக டிசம்பரில் கடல் ஆமைகள் முட்டையிட வரவில்லை. இருப்பினும், கடந்த சில நாட்களாக தன்னார் வலர்களுடன் கடலோரப் பகுதியில் இரவு ரோந்து செல் கிறோம். இந்த களப்பணியில் 1,200-க்கும் மேற்பட்ட தன்னார் வலர்கள் ஈடுபட்டுள்ளனர். இது ஏப்ரல் மாதம் வரை தொடரும்.
சென்னை, காஞ்சிபுரம் மாவட்ட கடலோரப் பகுதியில் 12 ஆயிரத்து 336 ஆமை முட்டைகளை கடந்த ஆண்டு சேகரித்தோம். அதில் 11 ஆயிரத்து 521 குஞ்சுகள் பொரித்தன. இது, முந்தைய ஆண்டைவிட 2,690 அதிகம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT