Published : 05 Jan 2016 08:35 AM
Last Updated : 05 Jan 2016 08:35 AM
வீட்டு உபயோக ஜவுளி ஏற்றுமதிக்கு பெயர் பெற்ற கரூர் தற்போது ஆயத்த ஆடை (கார்மென்ட்) ஏற்றுமதி தொழிலில் கால் பதிக்க உள்ளது.
கடந்த நூற்றாண்டின் தொடக் கத்தில் கைத்தறி நகரமாக அறியப் பட்ட கரூர், அரை நூற்றாண்டு களுக்கு முன் வீட்டு உபயோக ஜவுளி ஏற்றுமதி நகரமாக பெயர் பெற்றது. ஆண்டுக்கு ரூ.3,000 கோடி வரை கரூரில் ஜவுளி ஏற்றுமதி யாகிறது. கரூர் ஜவுளி ஏற்று மதியை வருங்காலத்தில் ரூ.10,000 கோடியாக அதிகரிக்க திட்டமிடப் பட்டது. தற்போது வீட்டு உபயோக ஜவுளி ஏற்றுமதியில் தேக்க நிலை ஏற்பட்டு உள்ளதால் கரூர் ஜவுளி ஏற்றுமதியை ரூ.10,000 கோடியாக அதிகரிக்கும் முயற்சியாக கார் மென்ட் (ஆடை உற்பத்தி) தொழி லில் கால் பதிக்கிறது கரூர்.
இதுகுறித்து இந்திய தொழில் கூட்டமைப்பின் கரூர் கிளைத் தலைவர் கே.ஜி.பிரிதிவி, செயலா ளர் பி.சுதாகர், முன்னாள் தலைவர் சுசீந்திரன் ஆகியோர் நேற்று தெரி வித்ததாவது:
இந்திய தொழில் கூட்டமைப்பின் கரூர் கிளை மூலம் ‘கரூர் விஷன்- 2023’ என்ற திட்ட அறிக்கை வெளி யிடப்பட்டது. இதில் கரூர் ஜவுளி ஏற்றுமதியை 2023-க்குள் ரூ.10,000 கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
தற்போது தேக்க நிலை இருப்ப தால், வீட்டு உபயோக ஜவுளி ஏற்றுமதியை ரூ.10,000 கோடியாக அதிகரிப்பதில் பெரிதும் சிரமம் உள்ளது. திருப்பூர் ஏற்றுமதி ரூ.25,000 கோடியாக உள்ள நிலையில் வரும் ஆண்டுகளில் அதை ரூ.1 லட்சம் கோடியாக அதிகரிக்க திட்டமிட்டு உள்ளனர்.
இதில் கார்மென்ட் தொழிலுக்கு மட்டும் ரூ.25,000 கோடி அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதில் ரூ.5,000 கோடியை கரூருக்கு ஈர்க்கவும், கரூரின் ஒட்டுமொத்த ஏற்றுமதியை ரூ.10,000 கோடியாக அதிகரிப்பதற்காகவும் கரூரில் ஆயத்த ஆடை தொழில் தொடங்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பூர்வாங்க பணிகள் மேற்கொள் ளப்பட்டு உள்ளன.
முதல் கட்டமாக 25 பேர் ஆயத்த ஆடை தொழிலில் ஈடுபட உள்ள னர். வரும் ஏப்ரல் முதல் உற்பத் தியை தொடங்கத் திட்டமிடப்பட்டு உள்ளது. 25 முதலீட்டாளர்களில் முழுக்க முழுக்க பெண்களைக் கொண்டு இயங்கும் ஒரு முதலீட்டு குழு, தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் பொருளாதாரத்தில் பின்தங் கியவர்களை இணைத்து ஒரு முதலீட்டுக் குழுவுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது.
இதற்காக ஆயத்த ஆடை உற்பத்தி தொடர்பான அனைத்து வசதிகளையும் கொண்ட பொது வசதி மையம் செயல்படுத்தப்படும். இதில் ஆண்கள், பெண்கள், குழந் தைகளுக்கான டீ ஷர்ட்கள் உற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் உடனடியாக 2 அல்லது 3 ஆயிரம் பேருக் கும், வருங்காலத்தில் 50 ஆயிரம் பேருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT