Published : 17 Jul 2016 09:51 AM
Last Updated : 17 Jul 2016 09:51 AM

கல்விக் கடன் நெருக்கடியால் பொறியியல் மாணவர் தற்கொலை: மதுரையில் பரிதாப சம்பவம்

மதுரை அவனியாபுரம் மேல அனுப்பானடியைச் சேர்ந்தவர் கதிரேசன். கொத்தனார் வேலை பார்க்கிறார். இவரது மகன் லெனின்(23). இவர் பொறியியல் கல்வி படிப்பதற்காக தேசிய மய மாக்கப்பட்ட வங்கி ஒன்றில் ரூ.1.90 லட்சம் கடன் வாங்கி இருந்தார். இந்நிலையில், லெனின் பொறியி யல் படிப்பை முடித்தாலும், சில பாடங்களில் தேர்ச்சி பெறாததால் அவரால் வேலைக்குச் செல்ல முடியவில்லை. வேலை கிடைக்கா த தால் கல்விக் கடனை அடைக்க முடியவில்லை.

இந்நிலையில், அந்த வங்கிக் காக கடனை வசூலிக்கும் தனியார் ஏஜென்சி நிறுவனம் ஒன்று, கடனை கட்டுமாறு தொலைபேசி மூலமா கவும், எஸ்எம்எஸ் மூலமாகவும் தொடர்ந்து மாணவருக்கு தகவல் கொடுத்துள்ளது. ஒரு புறம் கடனை அடைக்கச் சொல்லி நெருக்கடி, மற்றொரு புறம் படிப்பை முடிக் காததால் வேலைக்கு செல்ல முடியாத மன உளைச்சலால் லெனின் பரிதவித்து வந்துள்ளார்.

சில நாட்களுக்கு முன் அந்த தனியார் நிறுவன ஏஜென்சியினர் லெனினின் வீட்டுக்கே சென்று கடனை திருப்பிச் செலுத்துமாறு நெருக்கடி கொடுத்ததாகக் கூறப் படுகிறது. மனமுடைந்த லெனின் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர் பாக அவனியாபுரம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறும்போது, “ஏற்கெனவே தேசியமயமாக்கப் பட்ட வங்கி ஒன்று, தாங்கள் வழங்கிய கல்விக் கடனில் 45 சதவீதத்தை வசூலிக்க, தனியார் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கியபோதே நாங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தோம். கல்விக் கடன் பெற்றவர்களுக்கு வேலை கிடைத்தால் ஊதியத்தில் பிடித்துக் கொள்ளலாம். வேலையே கிடைக் காதபோது கந்து வட்டி வசூலிப்ப து போல, மாணவர்களை மிரட்டி அடாவடியாக வசூல் செய்வது மிகவும் மோசமானது.

இந்த அணுகுமுறை சரியென் றால், கல்விக் கடனை வசூ லிக் கும் குறிப்பிட்ட அந்த நிறு வனம் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்ற 50 ஆயிரம் கோடி ரூபாய் கடனை யாரிடம் வசூலிக்கச் சொல்வது?. இந்தப் பிரச்சினையில் உடனடியாக அரசு தலையிட்டு வங்கிகள் வழங்கிய கடனை தனியார் வசூலிக்கும் கான் ட்ராக்ட் முறையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்விக் கடனை ரத்து செய்ய மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்” என்றார்.

மாணவர் லெனினின் தந்தை கதிரேசன் கூறும்போது, “என் மகன் இந்த முடிவை எடுப்பார் என கனவிலும் நினைத்துப் பார்க்க வில்லை.

தற்கொலை முடிவுக்குச் செல்வது முன்கூட்டியே எனக்கு தெரிந்திருந்தால், எனது வீட்டை விற்றாவது கடனை அடைத்திருப் பேன். கல்விக் கடனை கட்ட முடியவில்லை என்று மனமுடைந்து தற்கொலை செய்வது எனது மகனோடு முடியட்டும். என் மகனைப் போல மற்ற மாணவர்களும் இதுபோன்ற தவறான முடிவை எடுத்துவிடாமல் இருக்க கல்விக் கடன் முழுவதையும் இந்த அரசு ரத்து செய்ய வேண்டும்” என்றார்.

கடனை வசூலிக்க ஏஜென்சிகள்

தனியார் நிதி நிறுவனங்கள் கடனை வசூலிக்க ஆட்களை நியமித்து கடன் பெற்றவரை தேடிச் சென்று மிரட்டுவார்கள். கடனை திருப்பிச் செலுத்த முடியாதபட்சத்தில், அடாவடியாக வாகனங்களை பறிமுதல் செய்வார்கள். இவர்களைப் பின்பற்றி தற்போது தனியார் வங்கிகள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளும் தாங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கிய கடனை வசூலிக்க கமிஷன் அடிப்படையில் தனியார் ஏஜென்சிகளுக்கு கான்ட்ராக்ட் விட்டுள்ளன. இவர்கள் முதலில் எம்எம்எஸ் மூலமும், தொலைபேசி மூலமும் கடனை திரும்பச் செலுத்தும்படி கேட்டு தொந்தரவு செய்வார்கள். அதன்பின், நேரடியாக வீட்டுக்கே வந்து கந்துவட்டிக்காரர்கள் போல நெருக்கடி கொடுப்பார்கள். அவமானத்துக்கு பயந்தவர்கள் எதையாவது விற்று கடனைத் திருப்பிச் செலுத்துவார்கள். சிலர் மனமுடைந்து தற்கொலை செய்வதும், ஊரை விட்டு ஓடுவதும் வெளிச்சத்துக்கு வராத அவலங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x