Last Updated : 17 Sep, 2016 09:49 AM

 

Published : 17 Sep 2016 09:49 AM
Last Updated : 17 Sep 2016 09:49 AM

குற்றவாளிகளை எளிதில் கண்டுபிடிக்க காவல்துறை ஆன்லைனில் ஆதார் எண் இணைக்கப்படுமா?- கைரேகை பதிவு காவல்துறை எதிர்பார்ப்பு

காவல்துறை ஆன்லைனில் ஆதார் எண்ணை இணைத்தால் பல்வேறு குற்றச் செயல் புரிவோரை துரித மாகக் கண்டுபிடிக்க உதவும் என போலீஸ் நம்பிக்கை தெரிவிக்கிறது.

சமூகத்தில் ஒரு காலத்தில் குற்றச் செயல்களை கண்டுபிடிக்க, காவல்துறைக்கு பெரிதும் உதவிகர மாக இருந்தது கைரேகை பிரிவு. எந்தக் குற்றமாக இருந்தாலும், முதலில் தடயவியல் நிபுணர் களுக்கு முக்கியத்துவம் தரப்படும். சம்பவ இடத்தில் கிடைக்கும் ரேகைப் பதிவுகளின் அடிப்படையில் சந்தேக நபர்களின் ரேகைகளோடு ஒப்பீடு செய்து, குற்றவாளிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ரேகைகள் எதுவும் கிடைக்காத நிலையில், குற்றம் புரிவோர் விட்டுச் செல்லும் ஒரு சில தடயங்களே துப்பு துலக்க போலீஸாருக்கு உதவும். தற்போதும் இத்துறைக்கு உள்ள முக்கியத்துவம் குறையவில்லை என்றாலும், செல்போன்கள் வரு கைக்குப் பின் போன் எண்கள் பெரிதும் உதவிகரமாக உள்ளது. பாதிக்கப்பட்டோர், பாதிப்பை ஏற் படுத்தியவரில் ஒருவரின் செல் போன் எண் இருந்தால் துப்பு துலங்க உதவுகிறது. கொலை, கொள்ளை, திருட்டு போன்ற குற்ற வழக்குகளில் ரேகைப் பதிவு எப்போதும் முக்கியம் என்பதால், இத்துறையை நவீனமாக்க வேண் டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித் துள்ளது.

இணையத்தில் பதிவேற்றம்

காவல்துறை நவீனமாக்கலில் ஒன்றான வலைப் பின்னல் திட்டத் தில் கொலை, கொள்ளை உட்பட பல்வேறு குற்றவாளிகளின் ரேகைப் பதிவு, அங்க அடையாளம், வழக்கு விவரங்களை இணையத்தில் பதிவேற்றுகின்றனர். இந்த விவரங் களை மாவட்டம், மாநிலம், இந் திய அளவிலான குற்றப் பதிவேடு பிரிவுகளுடன் ஒருங்கிணைந்து பார்க்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள் ளது. இது தடயவியல் பிரிவில் இன்னும் முழுமை பெறவில்லை என்ற புகாரும் உள்ளது.

கம்ப்யூட்டர் உட்பட தேவையான உபகரணங்கள் இருந்தும் ஆட்கள் பற்றாக்குறையால் செயல்படுத்த முடியாத நிலை உள்ளதாக அப் பிரிவினர் கூறுகின்றனர். ஆன்லை னில் ஒருங்கிணைத்து பார்க்கும் வசதி வந்தால், இந்திய அளவில் சந்தேகக் குற்றவாளி ஒருவரின் கைரேகை, பிற விவரங்களை இருந்த இடத்தில் இருந்தே எளிதில் ஆய்வு செய்து கண்டுபிடிக்க முடியும். இது குற்றவாளிகளை விரைந்து பிடிக்க உதவும் என அப்பிரிவு அதிகாரிகள் தெரிவிக் கின்றனர்.

இது பற்றி கைரேகை பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது:

காவல் துறையின் நவீனமயமாக் கல் திட்டத்தில் பல்வேறு புதிய வளர்ச்சிகள் வந்துள்ளன. ஒருங் கிணைந்த வலைப் பின்னல் திட்டத் தால் மாநகராட்சி, மாவட்ட காவல் அலுவலகங்களில் சிசிடிஎன்எஸ் (கிரைம், கிரிமினல், டிராக்கிங் நெட் வொர்க் சிஸ்டம்) பிரிவு செயல் படுகிறது. இவற்றால் எல்லா காவல் நிலைய வழக்குகளின் விவரங் களையும் அறியும் வசதி உள்ளது.

50 சதவீத காலியிடங்கள்

தினமும் எஃப்ஐஆர் உட்பட வழக்கு விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்கின்றனர். நீதிமன்றம், காவல்துறையினர் அலுவலகத்தில் இருந்தே விவரங்களை அறியும் வசதியும் உள்ளது. இதே போன்று கைரேகைப் பிரிவையும் ஒருங்கி ணைக்க நடவடிக்கை அவசியமாகி றது. இப்பிரிவில் மாநில அளவில் 50 சதவீத காலியிடங்கள் நிரப்பப் படாமல் உள்ளன.

டிஎஸ்பி, ஆய்வாளர், எஸ்ஐ ரேங்கில் காலியிடங்கள் அதிகரித் துள்ளன. தற்போது, ஆன்லைனில் குற்றவாளிகளின் ரேகையை மாநில அளவில் ஒருங்கிணைத்து பார்க்க முடியவில்லை. மாவட் டம், மாநில அளவில் ஒரு குற்ற வாளியின் ரேகையை ஆய்வு செய்ய, மாநில குற்றப் பதிவேடு அலுவலகத்தை நாட வேண்டி யுள்ளது. இதில் தாமதம் ஏற்படு வதால் துப்பு துலக்குவதில் தொய்வு ஏற்படுகிறது.

குற்றவாளி, சந்தேக நபர்களின் கைரேகைகளை காவல் நிலையத் தில் கருப்பு மையால் பதிவு செய் கின்றனர். வெளிநாடுகளை போன்று ‘லைஃப் ஸ்கேனர்’ என்ற நவீன கருவிகளை கொண்டுவர வேண்டும். ஒவ்வொரு போலீஸ் அதிகாரியின் வாகனத்திலும் அக்கருவி பொருத்தப்பட்டால் ஆங்காங்கே சந்தேக நபர்களின் ரேகையைப் பதிவு செய்ய வசதியாக இருக்கும்.

மேலும், ஆதார் எண்களை போலீஸ் ஆன்லைனோடு இணைத் தால், ஒருவரின் கைரேகை உட்பட அனைத்து விவரங்களையும் முகவரி மூலமே சுலபமாக அறிய முடியும்.

இதற்கு இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் எதிர்ப்பு உள்ளதாகக் கூறப்படு கிறது. ஆதார் எண்ணை பயன் படுத்தி விவரம் அறியும் திட் டத்தை காவல்துறையில் அமல்படுத் தினால் சந்தேக நபரின் ஆதார் மூலம் முகவரி கிடைத்தால் மட்டும் போதும். இந்திய அளவில் குற்றச் செயல்களை புரிவோர் எங்கு இருந்தாலும் சுலபமாக, துரிதமாக கண்டுபிடித்துவிடலாம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x