Published : 20 Jun 2015 10:25 AM
Last Updated : 20 Jun 2015 10:25 AM

கோவையில் தனியார் பள்ளிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சமூக விழிப்புணர்வு இயக்கத்தின் நிறுவனர் ஜே.டி.சாக்ரடீஸ் தலைமை வகித்தார்.

அரசு நிர்ணயித்த கட்டணத்தைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் பள்ளிகள் பெரும்பாலானவற்றில், தகுதியற்ற ஆசிரியர்களைக் கொண்டு பாடம் நடத்தப்படுகிறது. மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் நிலையில், இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெரும்பாலான தனியார் பள்ளிகள் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை செயல்படுத்தாமல் உள்ளது கண்டனத்துக்குரியது.

விளையாட்டு மைதானம், போதிய இடவசதி இல்லாமல் இயங்கி வரும் தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x