Last Updated : 07 Aug, 2015 09:36 AM

 

Published : 07 Aug 2015 09:36 AM
Last Updated : 07 Aug 2015 09:36 AM

தேவேந்திரகுல வேளாளராக 7 ஜாதிகளை ஒரே பெயரில் அறிவிக்க நடவடிக்கை: பாஜக தலைவர் அமித்ஷா உறுதி

தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோர் பிரிவில் உள்ள 7 ஜாதிகளை தேவேந்திரகுல வேளாளர் என ஒரே பெயரில் அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறை வேற்ற பிரதமர் மோடியிடம் வலியு றுத்துவேன் என பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்தார்.

தேவேந்திரர் தன்னார்வ அறக்கட்டளை, சுதேசி விழிப் புணர்வு இயக்கம் ஆகியவை இணைந்து தேவேந்திரர்குல வேளாளர் என அரசு ஆணை பெறு வதற்கான பிரதிநிதிகள் மாநாடு மதுரையில் நேற்று நடைபெற்றது. இதற்கு தேவேந்திரர் தன்னார்வ அறக்கட்டளை தலைவர் ம.தங்கராஜ் தலைமை வகித்தார். இதில் பாஜக அகில இந்திய தலைவர் அமித்ஷா பேசியதாவது:

ஒரு சமுதாயம், நாங்கள் தாழ்த்தப்பட்டோர் அல்ல, தேவேந் திரன் வம்சத்தை சேர்ந்தவர்கள் என்ற கவுரவம் பெறுவதற்காக மாநாடு நடத்துவது இதுவே முதல்முறை. பல்வேறு சமூகத் தினர் எங்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர். அவர் களுக்கு இந்த நிகழ்வு ஒரு வழிகாட்டுதலாக அமைந்துள்ளது.

இந்த மாநாட்டில் புதிய சிந்தனை ஒன்றும் உருவாகியுள்ளது. ஜாதியை பயன்படுத்தி சமு தாயத்தை பிரிப்பதா, ஜாதியில் உள்ள நல்ல விஷயங்களை சொல்லி எல்லா சமுதாயங்களையும் ஒன்றுபடுத்துவதா என்ற புதிய சிந்தனைதான் அது.

தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோர் பிரிவில் உள்ள 7 ஜாதிகளை தேவேந்திரகுல வேளாளர் என ஒரே பெயரில் அறிவிக்க வேண்டும் என்ற மதுரை பிரகட னத்தை நிறைவேற்ற பிரதமர் மோடியிடம் வலியுறுத்துவேன். இந்த கோரிக்கையை பாஜக ஆதரிக்கிறது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஒரு ஆண்டில் பல்வேறு சாதனைகளை செய்துள்ளது. இந்த ஒரு ஆண்டில் உலக நாடுகளில் இந்தியாவுக்கு மிகப்பெரிய கவுரவத்தை பெற்றுக் கொடுத்துள்ளார். தொடர்ந்து சாதனைகளை செய்துவரும் மோடி அரசுக்கு ஆதரவு தர வேண்டும். தமிழகத்தை ஊழலற்ற மாநிலமாக மாற்ற அனைத்து சமூக இளைஞர்களும் உறுதி ஏற்க வேண்டும் என்றார்.

சுதேசி விழிப்புணர்வு இயக்க நிர்வாகிகள் எஸ்.குருமூர்த்தி, இரா.னிவாசன் ஆகியோர் பேசினர். பாஜக பொதுச் செயலர் முரளிதர்ராவ், செயலர் எச்.ராஜா, தமிழக தலைவர் தமிழிசை, மூத்த தலைவர் இல.கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நாடார், தேவர், ரெட்டியார், யாதவர், நாயுடு சமுதாயத் தலை வர்கள் சேர்ந்து, தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை பிறப்பிக்க வேண்டும் என அமித் ஷாவிடம் மனு அளித்தனர்.

2-வது வருகை

நிகழ்ச்சியில் அமித்ஷா மேலும் பேசும் போது, இதற்கு முன்பு 7-ம் வகுப்பு படிக்கும்போது சுற்றுப் பயணத்தின்போது மதுரை வந்தேன். இப்போது 2-வது முறையாக வந்துள்ளேன். நமது முன்னோர்கள் உலக நாடுகளுக்கு சென்று சம்பாதித்த செல்வங்களை எப்படி பயன்படுத்தினார்கள் என்ப தற்கு மீனாட்சியம்மன் கோயில் சாட்சியாக உள்ளது. பத்து மாநி லங்கள் சேர்ந்து கட்ட நினைத்தாலும் இப்படியொரு கோயிலை கட்ட முடியாது. நமது முன்னோர்கள் அவ்வளவு செல்வங்களை கொண்டு வந்து இக்கோயிலை கட்டியுள்ளனர் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x