Last Updated : 24 Apr, 2017 07:24 AM

 

Published : 24 Apr 2017 07:24 AM
Last Updated : 24 Apr 2017 07:24 AM

தேசிய, மாநில நெடுஞ்சாலைகளை மாநகராட்சி, நகராட்சி கட்டுப்பாட்டில் கொண்டுவர நடவடிக்கை: புதிய டாஸ்மாக் கடைகள் திறக்க வாய்ப்பு

தேசிய மற்றும் மாநில நெடுஞ் சாலைகள், மாவட்ட சாலைகளை அத்தியாவசியப் பணிகளை விரைந்து செய்ய வசதியாக மாநகராட்சி, நகராட்சிகள் எடுத்துக் கொள்ளும் நடவடிக்கை தொடங் கப்பட்டுள்ளது. இதனால், டாஸ் மாக் கடைகளை அமைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தேசிய மற்றும் மாநில நெடுஞ் சாலைகள் ஓரத்தில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் மதுக் கடைகளை மார்ச் 31-ம் தேதிக்குள் மூட வேண் டும் என உச்ச நீதிமன்றம் உத்தர விட்டது. இதையடுத்து, தமிழகத் தில் 5,672 மதுக்கடைகளில், சாலையோரம் இருந்த 3,316 மதுக் கடைகள் மூடப்பட்டன.

இக்கடைகளில் பெரும்பாலா னவை மாநகராட்சி, நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை ஒட்டிய பகுதி களில் இருந்தவை. உச்ச நீதிமன்ற உத்தரவு காரணமாக, மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளில் மூடப்பட்ட பெரும்பாலான கடைகளை வேறு இடங்களில் அமைக்க இடம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளில் உள்ள தேசிய மற்றும் மாநில, மாவட்ட சாலைகளை மாநகராட்சி, நகராட்சி கள் வசம் எடுத்துக்கொள்ள நக ராட்சி நிர்வாக ஆணையர் அலுவ லகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுகுறித்து அனைத்து மாநகராட்சி ஆணையாளர்கள், நகராட்சி ஆணையாளர்களுக்கு நகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலகம் அனுப்பியுள்ள கடிதத் தில், மாநகராட்சி, நகராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் குடிநீர், பாதாளச் சாக்கடை பணிகளை விரைந்து செயல்படுத்தி, நடை முறை செலவினங்களை குறைக்க வேண்டியுள்ளது.

பிற துறைகளுக்கு செலுத்த வேண்டிய செலவினங்கள், கால தாமதம் ஆகியவற்றை தவிர்க்க வும். ‘NHAI’ சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ் சாலைகள், மாவட்ட முக்கிய சாலை கள், ஊராட்சி சாலைகள் உள்ளிட்ட வற்றை மாநகராட்சி, நகராட்சிகள் வசம் எடுத்துக்கொள்ள உரிய மன்றத் தீர்மானத்தை நிறை வேற்றி 25-ம் தேதிக்குள் அனுப் பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி, நக ராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது, “மாநகராட்சி, நகராட்சி ஆணையாளர்களுக்கு தனி அலுவ லர் பதவி வழங்கப்பட்டுள்ளது. எனவே, நகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலகம் கேட் டுள்ள விவரத்தை ஆய்வு செய்து, அந்தந்த மாநகராட்சி, நகராட்சி ஆணையாளர்களே தீர்மானம் இயற்றி அனுப்பி வைக்க முடியும்.

இந்த நடவடிக்கையின் மூலம் பாதாளச் சாக்கடை, குடிநீர் திட்டப் பணிகளை செய்யும்போது, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை நிர் வாகங்களிடம் அனுமதிக்கக்காகக் காத்திருக்க வேண்டியதில்லை” என்றனர். இதனால் சாலை ஓரங்களில் விரைவில் புதிய டாஸ் மாக் கடைகளை திறக்க வசதி ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x