Published : 12 Jan 2017 10:14 AM
Last Updated : 12 Jan 2017 10:14 AM

பிரபலங்களுக்கு பல அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்ட நிலையில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆருக்கு மீண்டும் அஞ்சல் தலை வெளியிட வாய்ப்பு

இந்தியாவில் மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, டாக்டர் அம்பேத்கர், அன்னை தெரசா என பல பிரபலங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட முறை அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதனால் எம்ஜிஆருக்கு 1990-ல் அஞ்சல் தலை வெளியிடப்பட்ட நிலையில், மற்றொரு அஞ்சல் தலை வெளியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரை சிறப்பிக்கும் விதமாக, அவரது நூற்றாண்டு சிறப்பு அஞ்சல் தலை வெளியிட தமிழக அரசு, மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு அஞ் சல் வட்டம் சார்பில், கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற மாநில அஞ்சல் தலை கண்காட்சியில் பங்கேற்ற தென்னிந்திய அஞ்சல் தலை சேகரிப்போர் சங்கத்தினர், அஞ்சல் துறையானது, எம்ஜிஆரை சிறப்பிக்கும் விதமாக 1990-ம் ஆண்டிலேயே சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு அஞ்சல் வட்ட முதன்மை அஞ்சல் துறை தலைவர் சார்லஸ் லோபோ ‘தி இந்து’விடம் கூறுகையில், ‘‘அஞ்சல்துறை ஏற்கெனவே எம்ஜிஆருக்கு அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது. தற்போது எம்ஜிஆரின் பிறந்த தின நூற்றாண்டு சிறப்பு அஞ்சல் தலையாக, இன்னும் ஒரு அஞ்சல் தலையை வெளியிட வேண்டும் என்று தமிழக முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார். பல பிரபலங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட முறை அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதனால் எம்ஜிஆருக்கு மற்றொரு அஞ்சல் தலை வெளியிட முடியும். அது குறித்து மத்திய அரசு முடிவெடுக்கும்’’ என்றார்.

தென்னிந்திய அஞ்சல் தலை சேகரிப்போர் சங்க செயலர் ரொலான்ட் நெல்சன் கூறும்போது, ‘‘வழக்கமாக ஒரு பிரபலத்துக்கு ஒருமுறைதான் அஞ்சல் தலை வெளியிடுவர். அதே வேளையில் சிறப்பு நேர்வாக அதிகபட்சமாக மகாத்மா காந்திக்கு 20-க்கும் மேற் பட்ட அஞ்சல் தலைகள் வெளியிடப் பட்டுள்ளன. அவர் தண்டி யாத்திரை செய்ததன் நினைவாகவும், ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பியதன் நினைவாகவும், அவர் மறைவின்போதும் என பல்வேறு நிகழ்வுகளை நினைவு கூரும் வகையில் அஞ்சல் தலை கள் வெளியிடப்பட்டுள்ளன. அவருக்கு அடுத்தபடியாக ஜவஹர் லால் நேரு, டாக்டர் அம்பேத்கர் ஆகியோருக்கும் அதிக அளவில் அஞ்சல் தலைகள் வெளியிடப் பட்டுள்ளன. அண்மை காலத்தில் அன்னை தெரசாவுக்கு 4 முறை அஞ்சல் தலைகள் வெளியிடப்பட் டுள்ளன. எனவே, எம்ஜிஆருக்கும் மற்றொரு அஞ்சல் தலை வெளியிட வாய்ப்புள்ளது’’ என்றார்.

ரூ.50-க்கு விற்பனை

சென்னையில் நடைபெற்ற கண்காட்சியில் 1990-ம் ஆண்டு வெளியிடப்பட்ட எம்ஜிஆரின் அஞ்சல் தலை, அப்போது 60 பைசா மதிப்பில் வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்டு 26 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அந்த அஞ்சல் தலைகள் தற்போது அஞ்சல் தலை சேகரிப்பாளர்களிடம் ரூ.50-க்கு கிடைக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x