Published : 27 Feb 2017 12:06 PM
Last Updated : 27 Feb 2017 12:06 PM
2
மாதத்தில் புதிய சட்டம் இயற்ற வேண்டும்
சீமை கருவேல மரங்களுக்கு தடை விதிக்க
தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
மதுரை
தமிழகம் முழுவதும் சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக மதிமுக பொதுச் செயலர் வைகோ உள்ளிட்ட பலர் உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுக்களை விசாரித்து தமிழகம் முழுவதும் சீமை கருவேல மரங்களை அகற்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பல மாவட்டங்களில் கருவேல மரங்களை அகற்றும் பணி தீவிர மாக நடைபெற்றுவரும் நிலையில், சில மாவட்டங்களில் மெத்தனமாக நடைபெற்று வருகிறது. இந்தப் பணி தொடர்பாக மதுரை, சிவ கங்கை, ராமநாதபுரம், புதுக் கோட்டை மாவட்டங்களில் நீதிபதி கள் நேரில் ஆய்வு மேற்கொண்டு, மெத்தனமாக பணிகள் நடைபெற்று வருவதாக வேதனை தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலைய ரசன் அமர்வில் நேற்று விசார ணைக்கு வந்தது. அரசு கூடுதல் வழக்கறிஞர் கோவிந்தன் வாதிடும் போது, 32 மாவட்டங்களிலும் கருவேல மரங்களை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வரு கிறது.
நெல்லை, தூத்துக்குடியில் 90 சதவீதப் பணிகள் முடிவடைந் துள்ளன. பிற மாவட்டங்களில் ஏலம் விடும் பணி நடைபெற்று வருகிறது என்றார்.
வைகோ வாதிடும்போது, சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி தீவிரமாக நடைபெறவில்லை. சாலையோரங்களில் உள்ள பகுதி களில் மட்டுமே சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. ஊருக்குள் உள்ள நிலங்களில் கருவேல மரங்கள் அப்படியேதான் உள்ளன என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், தமிழ கம் 75 சதவீத கருவேல மரங்களால் சூழப்பட்டுள்ளது. இதில் 10 சத வீதத்துக்கும் குறைவாகவே கரு வேல மரங்கள் மட்டுமே அகற்றப் பட்டுள்ளன. ஒரு சில மாவட்ட ஆட்சியர்கள் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கருவேல மரங் களை அகற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளாமல் உள்ளனர். இது அவர்களின் பொறுப்பற்ற தன்மையைக் காட்டுகிறது என்றார்.
இதையடுத்து, கருவேல மரங்களின் தீமைகளைக் கருத் தில்கொண்டு தமிழகத்தில் சீமை கருவேலத்துக்கு தடை விதிப்பது மற்றும் அபராத உட்பிரிவுகளுடன் சேர்ந்த புதிய சட்டத்தை தமிழக அரசு 2 மாதங்களில் நிறைவேற்ற வேண்டும். நிதிப் பற்றாக்குறையால் பல்வேறு இடங்களில் கருவேல மரங்களை அகற்றும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக பலர் தெரிவித்துள்ளனர். இதனால் சீமை கருவேல மரங்களை அகற்றும் பணிக்காக மாவட்டங்களுக்கு தேவையான நிதியை தமிழக அரசு ஒதுக்க வேண்டும்.
கருவேல மரங்கள் அகற்றும் பணி நடைபெறுவது தொடர்பாக உயர் நீதிமன்ற நீதிபதிகள் எப்போது வேண்டுமானாலும் ஆய்வு மேற்கொள்வார்கள். அப்போது நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதில் குறைபாடுகள் காணப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் விசாரணையை மார்ச் 20-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
ஊடகங்களுக்கு பாராட்டு
சீமை கருவேல மரங்கள் தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாக ஊடகங்களை நீதிபதிகள் பாராட்டினர். இது தொடர்பாக நீதிபதிகள் கூறும்போது, சீமை கருவேல மரங்களால் ஏற்படும் தீமைகள் குறித்து ஊடகங்கள் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன. இதற்காக ஊடகங்களை பாராட்டுகிறோம். இப்பணியை ஊடகங்கள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்..
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT