Published : 26 Apr 2017 06:15 PM
Last Updated : 26 Apr 2017 06:15 PM

ராமேசுவரம் அருகே பாக்ஜலசந்தி கடற்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஹோவர் கிராப்ட் கப்பல் திடீர் பழுது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தின் மிக அருகாமையில் இலங்கை உள்ளது. இதனால் கடல் வழியாக அந்நியரின் ஊடுருவல் மற்றும் கடத்தல் போன்ற சம்பவங்களை தடுப்பதற்காகவும் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இந்திய கடலோர காவல் படை நிலையம் செயல்பட்டு வருகிறது.

இதற்காக கடலோர காவல் படை நிலையத்திற்குச் சொந்தமான ஹோவர் கிராப்ட் கப்பல்கள், சி-414, சி-416 அதிவேக ரோந்து கப்பல்கள், அய்.சி-104, அய்.சி-109 ஆகிய ரோந்துப் படகுகளும் ராமேசுவரம், தனுஸ்கோடி, பாம்பன், மண்டபம் உள்ளிட்ட மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி கடற்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், கடலோர காவல் படைக்கு சொந்தமான தண்ணீரிலும் - தரையிலும் செல்லக்கூடிய ஹோவர் கிராப்ட் கப்பல் பாக்ஜலசந்தி கடற்பகுதியில் மண்டபத்திலிருந்து தனுஷ்கோடி தீடைப் பகுதிகளுக்கு ரோந்து பணிக்காக சென்று கொண்டிருந்த போது புதன்கிழமை அதிகாலை திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டு பழுதானது.

இதனையடுத்து ராமேசுவரம் ஓலைக்குடா கடற்படை பகுதிக்கு ஹோவர் கிராப்ட் கப்பல் கொண்டு வந்த கடற்படை அதிகாரிகள் அந்த கப்பலில் ஏற்பட்ட பழுதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x