Published : 28 Jun 2017 09:37 AM
Last Updated : 28 Jun 2017 09:37 AM
சேவல் கூவ பொழுது விடியும் என்பார்கள். ஆனால், நீலகிரி மாவட்டத்தின் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்டபகுதிகளில் விடியற் காலையில் வீட்டுக் கதவைத் திறந்தால் காட்டு மாடுகள் தான் 'குட்மார்னிங்' சொல்கின்றன.
குடியிருப்புப் பகுதிகளில் மட்டுமில்லாது, தேயிலைத் தோட்டங்கள், சுடுகாடுகள், சந்தைகள், பேருந்து நிறுத் தங்கள் என திக்கெட்டும் இந்தக் காட்டு மாடுகள் திகில் கிளப்புவதால் நீலகிரி மக்கள் தினமும் விநோத விபத்துகளை எதிர்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில், கடந்த ஆண்டு மட்டுமே இங்கே 7 பேரை காவு வாங்கி இருக்கின்றன காட்டுமாடுகள். காயம் பட்டவர்கள் நூற்றுக்கணக்கில்!
அண்மையில் கேத்தி பகுதியில் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற மைதீன் என்ற கூலித் தொழிலாளியை மாடு முட்டித் தள்ள.. பயத்தில் அவர் மரக்கிளையை பிடித்துக் கொண்டு தொங்க.. மீண்டும் அவரை முட்டப் பாய்ந்த மாடு பள்ளத்தில் விழுந்து பரிதாபமாய் உயிரை விட்டது. நல்ல வேளையாக மைதீன் தப்பினார். இது நடந்து இரண்டு நாள் கழித்து தூணேறி கிராமத்தில் ருக்மணி என்ற பெண்மணியை முட்டித்தள்ளி ஆஸ்பத்திரிக்கு அனுப்பியது காட்டு மாடு. இப்படி, ஊட்டியைச் சுற்றியுள்ள ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களை தினமும் கிர்..ரடிக்க வைத்துக் கொண்டிருக்கின்றன இந்த மாடுகள்.
அண்மையில் கேத்தி பகுதியில் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற மைதீன் என்ற கூலித் தொழிலாளியை மாடு முட்டித் தள்ள.. பயத்தில் அவர் மரக்கிளையை பிடித்துக் கொண்டு தொங்க.. மீண்டும் அவரை முட்டப் பாய்ந்த மாடு பள்ளத்தில் விழுந்து பரிதாபமாய் உயிரை விட்டது. நல்ல வேளையாக மைதீன் தப்பினார். இது நடந்து இரண்டு நாள் கழித்து தூணேறி கிராமத்தில் ருக்மணி என்ற பெண்மணியை முட்டித்தள்ளி ஆஸ்பத்திரிக்கு அனுப்பியது காட்டு மாடு. இப்படி, ஊட்டியைச் சுற்றியுள்ள ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களை தினமும் கிர்..ரடிக்க வைத்துக் கொண்டிருக்கின்றன இந்த மாடுகள்.
காட்டு மாடுகள் செய்யும் அட்டகாசங்களையும் அதனால் மக்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகளையும் ஒளிப் படங்களாக எடுத்திருக்கும் வி.மதிமாறன் என்பவர், அவற்றை எல்லாம் தொகுத்து அண்மையில் நடந்த ஊட்டி கோடை விழாவில் விழிப்புணர்வு கண்காட்சியாக வைத்திருந்தார்.
அவரிடம் பேசினோம். ‘‘நீலகிரியில் பீன்ஸ், அவரை, பட்டாணி, நூக்கோல், முட்டைக்கோஸ், கேரட், முள்ளங்கி, பீட்ரூட் உள்ளிட்ட காய்கனி விவசாயம் அதிகம். இதை யெல்லாம் கண்டபடி துவம்சம் செய்துவிடுகின்றன காட்டு மாடுகள். காடுகள் எல்லாம் நிலங்களாகவும் எஸ்டேட்டுகளாகவும் ஆகிவிட்டதால் மேய்ச்சலுக்கு இடமில்லாமல் மாடுகள் ஊருக்குள் வருகின்றன.
10 வருஷத்துக்கு முந்தி எல்லாம் காட்டு மாடுகள் அதிக அளவில் வேட்டையாடப்பட்டன. இப்போது கண்காணிப்புகள் அதிகமாகி விட்டதால் வேட்டை பெருமளவு தடுக்கப்பட்டு விட்டது. மாடுகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணம். காடுகள் - புல்வெளி - கால்நடைகள் - வேட்டை விலங்குகள் என்றிருந்த உயிர் சங்கிலி தடைபட்டுப் போனதால் மாடுகள் ஊருக்குள் வந்துவிட்டன. காட்டு மாடுகளின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க அதனால் ஏற்படும் ஆபத்துகளும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன’’ என்கிறார் மதிமாறன்.
இந்தப் பிரச்சினைக்கு என்னதான் தீர்வு? நீலகிரி வடக்கு மாவட்ட வன அலுவலர் கலாநிதியிடம் கேட்டபோது, ‘‘நீலகிரியில் மக்களோடு மக்களாக காட்டு மாடுகளும் வசிக்கப் பழகிவிட்டன. 60 மீட்டருக்கு அப்பால் இருந்தால் மாடுகள் மனிதர்களை எதுவும் செய்வதில்லை. அதைவிட பக்கமாக நெருங்கும் போதுதான் அவை மூர்க்கத்தனத்தைக் காட்டுகின்றன. கோடையில் காடுகளுக்குள் புற்கள் இருக்காது என்பதால் காட்டு மாடுகள் உணவுக்காக வெளியில் வருகின்றன. இந்த ஆண்டு வறட்சியின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக இருப்பதால் காட்டு மாடுகளும் அதிக எண்ணிக்கையில் ஊருக்குள் வந்துவிட்டன. இருப்பினும் ‘மாடுகளால் தொல்லைகள் வராதிருக்க அவற்றின் அருகே செல்லாதீர்கள்’ என்று விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறோம்’’ என்றார் அவர்.
கண்காட்சி படங்களை ‘தி இந்து தமிழ்’ இணைய தளத்தில் காண http://bit.ly/2tfCuWe
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT