Published : 19 Mar 2017 09:05 AM
Last Updated : 19 Mar 2017 09:05 AM

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இலையை முடக்கி காலூன்ற முயல்கிறதா பாஜக?

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி யாருக்கு என்பதைவிட இரட்டை இலை யாருக்கு என்பது தான் இப்போது மிகப்பெரிய எதிர் பார்ப்பாக இருக்கிறது. அதேநேரம் இடைத்தேர்தலை தூண்டிலாக வைத்து பலவிதமான அரசியல் கணக்குகளை பாஜக போடுவதால் களத்தில் இரட்டை இலைக்கு இடமிருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவை வைத்து தமிழகத்தில் காலூன்றுவற்கான முயற்சிகளை பாஜக ஆரம்பித்துவிட்டது. சாது வாக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தை தங்களுக்கு எதிராக மிரள வைத்த தின் பின்னணியில் பாஜக இருப்ப தாக அப்போதே சசிகலா தரப்பு சந்தேகம் கிளப்பியது.

இதையடுத்து, பன்னீர்செல்வத் தின் மீது அதிக கரிசனம் காட்டியது பாஜக தலைமை. டெல்லியில் ஓபிஎஸ்ஸை சந்திக்க நேரம் ஒதுக் கிய பிரதமர், மக்களவை துணை சபாநாயகராக இருந்தபோதும் சசிகலா தரப்பு என்பதால் தம்பி துரையை சந்திக்காமல் தவிர்த் தார்.

பெரும்பான்மை எம்எல்ஏக் களின் ஆதரவு கடிதத்தை ஆளு நரிடம் கொடுத்து ஆட்சி அமைக்க உரிமை கோரிய சசிகலாவை ஒரு வாரம் காக்க வைத்தார் ஆளுநர். சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறை செல்வது உறுதி. அப்படி நடந்தால் ஒட்டுமொத்த அதிமுகவும் பன்னீர்செல்வத்தின் கைக்கு வந்துவிடும் என்பது பாஜக-வின் கணக்கு. ஆனால், இவர்களின் கணிப்புகள் மாறி, எம்எல்ஏக்களை காபந்து செய்து எடப்பாடி பழனிசாமியை முதல் வராக்கிவிட்டது சசிகலா தரப்பு.

இலையை முடக்கினால்..?

இந்த நிலையில், சசிகலா அணியை பலவீனப்படுத்த ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் மூலம் காய் நகர்த்துகிறது பாஜக. இரட்டை இலை சின்னம் சசிகலா அணியிடம் இருக்கக் கூடாது. முடிந் தால் அதை பன்னீர் தரப்புக்கு ஒதுக்க வைப்பது, இல்லாவிட்டால் யாருக்குமே இரட்டை இலை இல் லாத நிலையை உருவாக்குவது தான் பாஜகவின் திட்டம் என்று கூறப்படுகிறது. ஏற்கெனவே, தத்தளித்துக் கொண்டிருக்கும் சசிகலா தரப்புக்கு இரட்டை இலையும் கிடைக்காமல் போனால் அது மேலும் சிக்கலை ஏற்படுத்தும்.

இடைத்தேர்தலில் தினகரன் பின் னுக்குத் தள்ளப்பட்டு மதுசூதனன் முன்னுக்கு வந்தால் அதிமுக மறுபடியும் கலகலக்கும். மேலும் சில எம்.பி., எம்எல்ஏக்கள், கட்சிப் பொறுப்பாளர்கள் பன்னீர்செல்வத் தின் பக்கம் தாவலாம். பன்னீர் அணியை வலுப்படுத்தி அவர் களுக்கே மீண்டும் இரட்டை இலையை பெற்றுத் தரலாம். அதற்கு பிரதிபலனாக அடுத்த தேர்தல்களில் பன்னீர் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தமிழகத்தில் வலுவான அடித்தளத்தை அமைக்கலாம். இதுதான் பாஜகவின் மறைமுக திட்டம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

இதற்கிடையே, மார்ச் 22-ல் பன்னீர்செல்வம், சசிகலா தரப்பை நேரில் ஆஜராகி விளக்கமளிக்க அழைத்திருக்கிறது தேர்தல் ஆணையம். ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் இரட்டை இலை இருக்குமா, இல்லையா என்பதில் தேர்தல் ஆணையமும் ஒரு முடிவுக்கு வந்துவிட்டதாகவே தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x