Published : 26 Feb 2014 12:50 PM
Last Updated : 26 Feb 2014 12:50 PM
சென்னை தேனாம்பேட்டையில் அதிமுக பிரமுகர் ஒருவர் ஓடஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். காரில் வந்த 7 பேர் கும்பல் இந்த கொலை வெறி தாக்குதலை நடத்தியது.
தேனாம்பேட்டை பர்வா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் தரை தளத்தில் வசித்துவந்தவர் ஆறுமுகம் (39). இவர் 115-வது வார்டு அதிமுக வட்ட துணைச் செயலாளராக இருந்தார். வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். செவ்வாய்க் கிழமை காலையில் வீட்டருகே உள்ள டீக்கடைக்கு சென்று மரத்தடியில் நின்று கொண்டி ருந்தார். அப்போது காரில் இருந்து இறங்கிய 7 பேர் கும்பல் ஆறுமுகத்தை நோக்கி அரிவாளுடன் ஓடியது. இதைப் பார்த்த ஆறுமுகம் உயிரை காப் பாற்றிக் கொள்ள ஓடத் தொடங் கினார்.
ஆனால் அந்த கும்பல் அவரை நடுரோட்டிலேயே வெட்டிச் சாய்த்தது. தலை, கழுத்து, கை என 17 இடங்களில் ஆறுமுகத் துக்கு வெட்டு விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். காலை நேரம் என்பதால் இரண்டு டீக்கடைகளும், ஒரு பேப்பர் கடையும் மட்டுமே அந்த பகுதியில் திறந்திருந்தன. ஆறுமுகத்தை ஏற்கனவே தெரிந்து வைத்திருந்த கடைக்காரர்கள், அவரது வீட்டுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் தென் சென்னை இணை ஆணை யர் திரு ஞானம், தி.நகர் துணை ஆணையர் பகலவன் மற்றும் தேனாம்பேட்டை காவல் ஆய்வாளர் சரவணன் விரைந்து சென்று விசாரணை நடத்தி னர். ஆறுமுகத்தின் உடல் ராயப் பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப் பட்டது. போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது மோப்பம் பிடித்து சிறிது தூரம் சென்று நின்றுவிட்டது.
ஆறுமுகத்தின் தாயார் விருகம்மாள் மகன் இறந்து கிடந்த இடத்துக்கு வந்து தரையில் உருண்டு அழுததைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. ஆறுமுகத்துக்கு உமா (35) என்ற மனைவியும், ஜனனி (10), பிரஜன் (7) என இரு குழந்தைகளும் உள்ளனர்.
ஆறுமுகம் தனது வீட்டுக்கு எதிரில் அலுவலகம் வைத்துள்ளார். லட்சக்கணக்கில் பலர் இவரிடம் வட்டிக்கு பணம் வாங்கியுள்ளனர்.
ஏழு பேர் நீதிமன்றத்தில் சரண்
ஆறுமுகம் கொலை தொடர் பாக பாலகுமார் (32), ராமலிங்கம் (30), சுந்தர் (27), முத்து (25), வெங்கடேசன் (28), தங்கம் (32), ராஜு (28) ஆகிய ஏழு பேர் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் சென்னை எழும்பூர் 2-வது குற்றவியல் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். அவர்கள் அனை வரையும் 3-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். சரண் அடைந் துள்ள 7 பேரும் ஆறுமுகம் வசித்த அதே பர்வா நகரை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கொலைக்கான காரணம் என்ன?
ஆறுமுகம் முதலில் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். கையில் பணம் சேரவே அதை வட்டிக்கு விட்டு வந்தார். அவர் வசித்த பகுதியில் பலருக்கு அதிக வட்டிக்கு பணம் கொடுத்து, சில ரவுடிகளின் துணை யுடன் அதை வசூல் செய்ததாக கூறப்படுகிறது. கையில் அதிகமான பணம் புரளவே யாரை யும் மதிக்காமல் சின்ன சின்ன ரவுடித்தனமான செயல்களையும் செய்தாராம்.
சரண் அடைந்துள்ள பால குமாருக்கும் ஆறுமுகத்துக்கும் ஏற்கெனவே முன் விரோதம் இருந்துள்ளது.
2004-ம் ஆண்டு பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினையில் பாலகுமாரின் கையை ஆறுமுகம் அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே பலமுறை மோதல்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் அவர் தூண்டுதலின் பேரில்தான் கொலை நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. மேலும், ஆறுமுகத்தை வெட்டிய மற்ற 6 பேருக்கும் ஆறுமுகத்துக்கும் இடையே ஏற்கெனவே மோதல் இருந்துள்ளது.
சரணடைந்த அனைவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரித் தால் முழு உண்மை தெரியும் என்று போலீஸார் தெரிவித்தனர்.
ஆறுமுகம் முதலில் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். கையில் பணம் சேரவே அதை வட்டிக்கு விட்டு வந்தார். அவர் வசித்த பகுதியில் பலருக்கு அதிக வட்டிக்கு பணம் கொடுத்து, சில ரவுடிகளின் துணை யுடன் அதை வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT