Last Updated : 31 Aug, 2016 01:06 PM

 

Published : 31 Aug 2016 01:06 PM
Last Updated : 31 Aug 2016 01:06 PM

விழுப்புரத்தில் பின்னுக்குத் தள்ளப்பட்ட பெண் தலைவர்கள்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பெண் தலைவர்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு அவர்களின் உறவினர்களே அதிகாரம் செலுத்துவதாக ‘தி இந்து' உங்கள்குரல் பகுதியில் வாசகர்கள் பதிவு செய்திருந்தனர்.

இதுதொடர்பாக விசாரித்ததில், உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. பெண்களுக்கு உள் ளாட்சி அமைப்புகளில் 50 சதவீத இடஒதுக்கீடு அளிக்கலாமா என்று அரசு பரிசீலித்து வருகிறது.

இந்நிலையில் இடஒதுக்கீட்டில் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட பதவி யில் உள்ள மாவட்ட ஊராட்சித் தலைவர், ஒன்றிய பெருந்தலைவர் களின் உறவினர்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர். அரசு அலுவலகங்களில் கொடுக்கப்பட்ட மொபைல் எண் கூட அப்பெண்களின் கணவர் அல்லது சகோதரர், மகனின் எண்ணாகவே உள்ளது என்று தெரியவந்தது.

இதுதொடர்பாக விழுப்புரம் ஆட்சியர் அலுவலம் மூலம் மாவட்ட ஊராட்சித் தலைவர் அலமேலு வின் எண்ணுக்கு தொடர்பு கொண்ட போது, ட்ரூ காலரில் அவரது கனவர் வேலு எண் பதியப்பட்டிருந்தது. தொடர்ந்து முயற்சித்தும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. மேலும் மாவட்டத்தில் உள்ள 22 ஒன்றியங்களில் உள்ள பெண் ஒன்றியக்குழு தலைவர்களான ஒலக்கூர் இந்திரா, கண்டமங்கலம் ஷர்மிளா தேவி, கோலியனூர் விஜயா, செஞ்சி லட்சுமி, தியாகது ருகம் பச்சியம்மாள், திருவெண் ணைநல்லூர் மகாலட்சுமி, மரக் காணம் விஜயா, விக்கிரவாண்டி சுமதி ஆகியோரின் எண்களை அவர்களின் கணவர்களே உபயோகிக் கின்றனர் என்பதும் தெரியவந் துள்ளது.

மேல்மலையனூர் ஒன்றிய குழுத் தலைவர் விஜயாவிடம் மட்டுமே நேரில் பேச முடிந்தது. ரிஷிவந்தியம் ஒன்றிய குழுத் தலைவர் வேல்மயிலை தொடர்பு கொண்டபோது அவர் அளித்த எண் தவறானது என தெரியவந்தது. நீண்ட முயற்சிக்கு பின்னர் சேர்மனுக்கு தனி எண் கிடையாது. அவரது மகன் ஜெயபாலிடம் பேசிக் கொள்ளுங்கள் என்றனர்.

இதுதொடர்பாக உள்ளாட்சி நிர்வாக வட்டாரங்களில் கேட்ட போது, “பெண்களுக்கான ஒதுக் கீட்டில் தேர்வு செய்யப்பட்ட பெண்களின் கணவர் மற்றும் உறவினர்களே அதிகாரம் செலுத்து கின்றனர். இன்னும் சொல்லப் போனால் அவர்களின் கையெ ழுத்தையும் போடுகிறார்கள். கவுன்சில் கூட்டத்திலும் கலந்து கொள்கின்றனர். என்னதான் இடஒதுக்கீடு கொடுத்தாலும் ரப்பர் ஸ்டாம்ப் அளவிலேயே பெண்களுக்கான அதிகாரம் உள்ளது. இதற்கு அரசு அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனர்.

‘மாதர் தம்மை இழிவுபடுத்தும் மடமையை கொளுத்துவோம்' என்ற பாரதி இன்று இருந்தால் 'ஆண்களை கொளுத்துவோம்' என்றே எழுதி இருப்பார்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x