Published : 30 Oct 2013 10:34 AM
Last Updated : 30 Oct 2013 10:34 AM
தீபாவளி பண்டிகையை ஒட்டி தெற்கு ரயில்வே, சென்னை சென்ட்ரல்-பெங்களூரு- சென்னை சென்ட்ரல் மார்க்கத்தில் சிறப்பு ரயில்கள் அறிவித்துள்ளது.
இதன்படி, நவம்பர் 1-ல் இருந்து 5- ஆம் தேதி வரை ரயில் எண் 06013சென்னை சென்ட்ரல்-பெங்களூரு சிட்டி சிறப்பு ரயில்,தினமும் இரவு 11 மணியளவில் சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு காலை 4.50 மணியளவில் பெங்களூரு சிட்டி ரயில் நிலையத்தை சென்றடையும்.
அதே நவம்பர் 1-ல் இருந்து 5- ஆம் தேதி வரை, ரயில் எண் 06014, பெங்களூரு சிட்டி-சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில், பெங்களூரு சிட்டி ரயில் நிலையத்தில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு காலை 6 மணியளவில் சென்னை சென்ட்ரல் வந்தடையும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்த சிறப்பு ரயில்களுக்கான முன் பதிவு நாளை தொடங்குகிறது.
சிறப்பு ரயில்கள் நின்று செல்லும் இடங்கள் :
இந்த சிறப்பு ரயில்கள் யாவும் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, குப்பம், பங்கார்பேட், கிருஷ்ணராஜபுரம், பெங்களூரு கண்டோன்மன்ட் நிலையங்களில் நின்று செல்லும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment