Last Updated : 18 Dec, 2013 12:00 AM

 

Published : 18 Dec 2013 12:00 AM
Last Updated : 18 Dec 2013 12:00 AM

சென்னை சட்டக் கல்லூரி கட்டிடத்தில் சேதமடைந்த கோபுர கலசம் சீரமைப்பது எப்போது?

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்தோ – சார்சனிக் கட்டிடக் கலை வடிவமைப்பில் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தை ஒட்டி அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி கட்டிடம் பாரம்பரியச் சின்னமாகத் திகழ்கிறது.

சுமார் 115 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட அந்த கட்டிடத்தில் கடந்த 9.1.1899 முதல் சென்னை அரசு சட்டக் கல்லூரி இயங்கி வருகிறது. கட்டிடத்தின் முகப்பில் நிற்கும் மிக உயர்ந்த இரண்டு கோபுரத்தின் கலசங்களில் ஒன்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பெய்த கனமழை மற்றும் கடும் காற்றின் காரணமாக இடிந்து விழுந்தது. ஓராண்டுக்கு மேல் ஆகியும் இதுவரை மீண்டும் நிறுவப்படவில்லை. அதேபோல் சட்டக் கல்லூரி சுவர்களில் பல இடங்களில் செடிகள் முளைத்து வளர்ந்து வருகின்றன. இது குறித்து பொதுப்பணித் துறையினரிடம் கேட்ட போது, “தற்போது சட்டக் கல்லூரி கட்டிடத்தின் அருகிலேயே மெட்ரோ ரயில் திட்டத்துக்கான பணிகள் நடந்து வருகின்றன. கல்லூரியின் மேற்கு புறத்தில் காம்பவுண்ட் சுவர் இருந்த இடம் போக்குவரத்துக்கான சாலையாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சட்டக் கல்லூரி கட்டிட பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டுமானால் மிக உயரமான சாரங்களை அமைத்தாக வேண்டும். ஆனால் தற்போது அங்கு சாரம் அமைக்க வாய்ப்பில்லை.

ஆகவே, மெட்ரோ ரயில் பணிகள் நிறைவடைந்த பின்னர் கோபுர கலசம் சீரமைப்பு உள்பட அனைத்து பணிகளும் உடனடியாக மேற்கொள்ளப்படும்” என தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x