Published : 04 Apr 2014 11:49 AM
Last Updated : 04 Apr 2014 11:49 AM

நாட்டின் வளர்ச்சியை சொல்லியே வாக்கு சேகரிப்பு; மத அடிப்படையில் அல்ல - பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் லலிதா குமாரமங்கலம் பேட்டி

நாட்டின் வளர்ச்சியை மையப்படுத்தியே பாஜக வாக்கு சேகரிக்கிறது. மத அடிப்படையில் ஓட்டு கேட்கவில்லை என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் லலிதா குமாரமங்கலம் தெரிவித்தார்.

இதுகுறித்து சென்னை கமலாலயத்தில் வியாழக்கிழமை அவர் அளித்த பேட்டி:

நாட்டின் முன்னேற்றத்தை மையமாகக் கொண்டு பாஜக வாக்கு சேகரிக்கிறது. மத அடிப்ப டையில் வாக்கு சேகரிக்கவில்லை. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உ.பி.யில் முஸ்லிம் சமு தாயத்தைச் சேர்ந்த சில தலைவர் களைச் சந்தித்து முஸ்லிம் வாக்கு கள் சிந்தாமல், சிதறாமல் காங்கிர ஸுக்கு கிடைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இது தேர்தல் நடத்தை விதியை மீறிய செயலாகும். எனவே, இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுக்கவுள்ளோம்.

காங்கிரஸ் தலைவர் எஸ்.எம்.கிருஷ்ணா பேசுகையில், “ஆர்.எஸ்.எஸ். செயல்பாடுகளில் இருந்து நாம் நிறைய கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது” என்று கூறியிருக்கிறார். காங்கிரஸுக்கு தோல்வி பயம் வந்துவிட்டதையே இது காட்டுகிறது. ஊழலுக்கு எதிராக கட்சி தொடங்கியதாக கூறிவரும் அர்விந்த் கேஜ்ரிவால், தேர்தல் பிரச்சாரத்தில் ஊழலைப் பற்றி பெரிதாகப் பேசுவதில்லை. அக்கட்சியின் செல்வாக்கு சரிந்து வருகிறது.

இந்த வார இறுதியில் பாஜக வின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். காங்கிரஸ் கட்சியைத் தோற்கடிக்க வேண்டும் என்பதே எங்களது குறிக்கோள்.

2009-ம் ஆண்டு தேர்தலை யொட்டி நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் மத்திய அரசு மீது திருப்தி தெரிவித்தனர். ஆனால், இத்தேர்தலில் நிலைமை தலைகீழாக இருக்கிறது.

தமிழகத்தில் வெற்றி வாய்ப் புள்ள தொகுதிகள் கிடைக்காத தால் நான், டாக்டர் தமிழிசை சவுந்தர்ராஜன், வானதி சீனிவாசன் ஆகியோர் போட்டியிடவில்லை. அந்தத் தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக்கொடுத் துள்ளோம். தமிழ்நாட்டில் 35 சதவீத இளைஞர்களின் வாக்கு பாஜகவுக்கே கிடைக்கும் வாய்ப் புள்ளது. அவர்களைப் பொருத்த வரை நாட்டின் வளர்ச்சி, வேலை வாய்ப்பு, வருமானத்தைத்தான் பார்க்கிறார்கள். அந்த வளர்ச் சியை பாஜக கொடுக்கும் என நம்புகிறார்கள்.

கடந்த நாடாளுமன்றத் தேர் தலில் தமிழகத்தில் பாஜக தனித் துப் போட்டியிட்டது. ஒரு தொகுதி யிலும் வெற்றி பெறவில்லை. இத்தேர்தலில் பாஜக கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது. இந்தக் கூட்டணிக்கு 14 இடங் கள் கிடைக்கும் என்று இப்போது கணித்திருக்கிறார்கள். பாஜக கூட் டணி கணிசமான தொகுதிகளில் வெற்றி பெறும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x