Last Updated : 26 Feb, 2017 10:29 AM

 

Published : 26 Feb 2017 10:29 AM
Last Updated : 26 Feb 2017 10:29 AM

வல்லுநர் குழு அமைத்து ஓராண்டு முடிந்தது: பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்த ஆய்வறிக்கையை அளிப்பது எப்போது?

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட வல்லுநர் குழு அரசுக்கு எப் போது அறிக்கை அளிக்கும் என்று தமிழக அரசு ஊழியர் கள், ஆசிரியர்கள் எதிர்பார்க் கின்றனர்.

பழைய ஓய்வூதியத் திட் டத்தை அமல்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க முதல்வர் அலுவலக சிறப்பு அதிகாரியாக இருந்த சாந்தா ஷீலா நாயர் தலைமையில் கடந்த ஆண்டு பிப்.26-ம் தேதி அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவின் பதவிக் காலம் கடந்த டிச.25-ம் தேதியுடன் நிறைவடைந்தது. வல்லுநர் குழு தலைவரான சாந்தா ஷீலா நாயர் பிப்.6-ம் தேதி தனது பதவியை ராஜி னாமா செய்துவிட்ட நிலையில், குழு அமைத்து ஓராண்டாகியும் எவ்வித அறிவிப்பும் இல் லாதததால் வல்லுநர் குழு அரசுக்கு அறிக்கை எதுவும் அளித்ததா என்று அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களுக்குத் தெரியவில்லை.

இந்நிலையில், தமிழக அரசு ஊதிய விகித மாற்றக் குழு அமைத்துள்ளது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற் றச் சங்கத்தின் மாநிலத் தலைவர் கு.தியாகராஜன் கூறியதாவது:

ஊதிய விகித மாற்றத்துக் காக குழு அமைக்கப்பட்டுள் ளதை வரவேற்கிறோம். ஆனால், இந்தக் குழுவின் மீது நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை இல்லை. ஏனெனில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு அர சுக்கு அறிக்கை அளித்ததா?, அந்தக் குழு உயிர்ப்புடன் உள்ளதா? என்றே தெரிய வில்லை.

எனவே, புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து அறிவித்தால்தான், ஊதிய விகித மாற்ற குழுவின் மீது நம்பகத்தன்மையும், அரசின் மீது நம்பிக்கையும் ஏற்படும். இல்லாவிட்டால், உள்ளாட்சித் தேர்தலுக்கான கண்துடைப்பு நாடகமாகவே இதைப் பார்க்க முடியும் என்றார்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.சுப்பிரமணியன் கூறும்போது, “ஊதிய விகித மாற்றக் குழுவை அமைத் ததற்கு முதல்வரை சந்தித்து வரவேற்பு தெரிவித்தோம். அப்போது, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின் படி பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டு ஓராண் டாகிவிட்ட நிலையில், குழு தனது அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினோம். அதற்கு, ஒவ்வொன்றாக கவனிப்பதாக முதல்வர் உறுதி அளித்தார். ஊதிய விகித மாற்ற குழு அமைக்கும்போது வழங் கப்படும் இடைக்கால நிவா ரணத்தை உடனடியாக வழங்கினால்தான் அரசின் மீது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர் களுக்கு நம்பிக்கை வரும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x