Published : 30 Mar 2017 10:04 AM
Last Updated : 30 Mar 2017 10:04 AM

உள்ளாட்சி: குடிமராமத்து... குடி காக்கும் திட்டமா? குடி கெடுக்கும் திட்டமா? தமிழகத்தில் நடைபெறும் குடிமராமத்துத் திட்டப் பணிகள்

திமுக தலைவர் கருணாநிதி, மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருவர் மீதும் கடுமையான விமர் சனங்கள் உண்டு. ஆனால், அந்த விமர்சனங்களையும் தாண்டி அவர்கள் முதல்வர்களாக இருந்த காலகட்டங்களில் கடைக்கோடி சாமானிய மக்களுக்கு இருவர் மீதும் சிறு துளியேனும் நம்பிக்கை மிச்சம் இருந்தது. அதிகாரிகள், அமைச் சர்கள் யாராவது தவறு செய்தால் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்பினார்கள். மக்கள் அப்படி நம்புகிறார்கள் என்பதற்காகவேனும் அவர்கள் நடவடிக்கை எடுத்தார்கள். மக்களுக்கு தற்காலிக நிவாரணமாவது கிடைத்தது.

ஆனால், இன்று தமிழகத்தின் நிலை மிக மோசம். யாரிடம் முறை யிடுவது என்று கேட்பார் இல்லாமல் தவிக்கிறார்கள் மக்கள். ஏற்கெனவே எச்சரித்தது போலவே குடிமராமத்துத் திட்டத்தில் கொள்ளை அடிக்க ஆரம் பித்துவிட்டார்கள். தமிழகம் முழுவதும் ஏகப்பட்ட ஏரிகளில் 10 அடி ஆழத்துக்கு அதிகமாக தோண்டி சவுடு மண்ணை அள்ளத் தொடங்கி விட்டார்கள். கண்காணிப்பு கிடையாது. கணக்கு வழக்குக் கிடையாது. கடந்த காலங்களில் இப்படி கண்டபடி வெட்டியதால் ஏரிகளில் பெரும் பள்ளம் ஏற்பட்டது. மழைக் காலத்தில் அதில் தண்ணீர் தேங்கியது. இதனால் தமிழகத்தில் குழந்தைகள் உட்பட பல்வேறு குளங்களில் குளிக்கச் சென்ற பலரும் பரவலாக இறந்தார் கள். உண்மையில், குடி காக்க வேண்டிய திட்டத்தை வைத்து குடி கெடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அதே சமயம் பாமக நிறுவனர் ராமதாஸ் உடனடியாக இதைக் கண்டித் திருக்கிறார். குறிப்பாக, பிரச் சினையை அரசியல் ஆக்காமல் பாதிப்பு களை அறிவியல்பூர்வமாக விளக்கி யிருக்கிறார் அவர்.

“தூர் வாருதல் என்ற பெயரால் பல அடி ஆழத்துக்கு ஏரி மண்ணை வெட்டுவதாலும், சீராக மண்ணை எடுக்காமல் ஆங்காங்கே திட்டுத் திட்டாக மண் வெட்டுவதாலும் நீரோட்டம் பாதிக்கப்படும். பள்ள மாக வெட்டப்பட்ட பகுதிகளில் மட்டுமே தண்ணீர் தேங்கி நிற்கும். இதனால், மழைக் காலத்தில் நீர் நிறைந்தாலும்கூட மதகின் மட்டத்துக்கு தண்ணீர் உயராது. அப்போது பாசனத்துக்காகவும் தண்ணீரை வெளியேற்ற முடியாது. குடிமராமத்து என்ற பெயரில் நடக்கும் சவுடு மண் கொள்ளை குறித்து வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரி களிடம் உழவர்கள் புகார்கள் கொடுத்தாலும் கூட, மண் கொள்ளை யைத் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை” என்று சொல்லியிருக்கிறார் அவர். ஆனால், எதிர்க்கட்சிகள், பத்திரிகைகள் உட்பட யாரையுமே அதிகார வர்க்கம் பொருட்படுத்துவதில்லை. இது ஆரோக்கியமான நிலை அல்ல. மக்கள் குரலுக்கு செவி சாய்க்காத எந்த ஓர் அமைப்பும் நீண்ட நாள் நீடிக்காது!

சொல்லப்போனால், குடி மராமத்துப் பணிகளை தனி திட்டமாக செயல்படுத்த வேண்டிய அவசியமே கிடையாது. ரூ.400 கோடியும் தேவை இல்லை. மகாத்மா காந்தி வேலை உறுதித் திட்டத்திலேயே குடி மராமத்துத் திட்டத்தை நிறைவேற்ற முடியும். ஆட்சியாளர்களும் அதிகாரி களும் மன சுத்தியுடன் செயல்பட்டால் ஆறு மாதங்களில், குறிப்பாக அடுத்த வடகிழக்குப் பருவ மழை வரு வதற்குள் தமிழகத்தில் இருக்கும் பெரும்பாலான சிறு பாசன ஏரிகளை சீரமைத்துவிடலாம். ஆனால், ஒவ்வொரு முறையும் இதுதொடர்பில் பேச்சு எழும் போதெல்லாம் அதி காரிகள் தரப்பில் ‘நூறுநாள் வேலைத் திட்டத்தில் இயந்திரங்களைப் பயன் படுத்தக் கூடாது. எப்படி ஏரிகளைத் தூர் வாருவது?’ என்று சொன்னதையே திரும்ப திரும்பச் சொல்கிறார்கள்.

மகாத்மா காந்தி வேலை உறுதித் திட்டம் இயற்றப்பட்டபோது முழுமையாக மனித உழைப்பைப் பயன்படுத்த வேண்டும் என்று விதி முறைகள் இருந்தது உண்மைதான். ஆனால், அடுத்தடுத்த ஆண்டுகளில் சூழலுக்கு ஏற்ப விதிமுறைகள் தளர்த்தப்பட்டன. தொடர்ந்து பல்வேறு மாநிலங்கள் இந்தத் திட் டத்தில் உள்ளூர் சூழலுக்கு ஏற்ப இயந்திரங்களைப் பயன்படுத்த அனு மதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தன. குறிப்பாக, ஏரிகள், குளங்கள், ஆறுகள் போன்ற பாசனக் கட்டமைப்புகளை மேம்படுத்த நவீன இயந்திரங்கள் தேவை என்று பல்வேறு மாநிலங்கள் கேட்டுக்கொண்டன.

இதனால், கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் 25-ம் தேதி மத்திய அரசு ஓர் அரசாணை வெளியிட்டது. அதில், ‘மகாத்மா காந்தி வேலை உறுதித் திட்டம் என்பது இயந்திரங்களைப் பயன்படுத்தி மனித உழைப்பின் பலனை பறிக்கக் கூடாது என்பதை அடிப்படை நோக்கமாகக் கொண்டது. ஆனாலும், உள்ளுர் சூழலைப் பொறுத்து சில மாற்றங்கள் பரிந்துரைக் கப்படுகிறது. விவசாய நிலங்களை பண்படுத்தவும், கிணறு வெட்டவும் மோட்டார் பம்பு செட், இயந்திர மண்வெட்டி, மண் அள்ளிச் செல்லும் மோட்டார் வாளிகள் உள்ளிட்டவற்றை பயன்படுத்திக்கொள்ளலாம். சாலைப் பணிகளுக்கு பவர் ரோலர் உள்ளிட்ட நவீன இயந்திரங்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம்” என்று சொன்னது. அதே சமயம் திட்ட நிதியில் 60 சதவீதத்துக்கு குறையாமல் சம்பளத்துக்கும் மீதியை இயந்திரங்கள் மற்றும் பொருட்கள் வாங்க செல விடலாம் என்றும் சொன்னது. எனவே மேற்கண்ட விதிமுறைகளின் படியே தமிழகத்தில் எவ்வளவு பெரிய ஏரியையும் தூர் வார முடியும்.

ஓர் உதாரணம் சொல்கிறேன். மேற்கண்ட அரசாணை வருவதற்கு முன்பாகவே திருவாரூர் மாவட்டத்தில் நடந்தது இது. 2013-ம் ஆண்டு திருவாரூர் மாவட்டத்தில் 5,200 பண்ணைக் குட்டைகள் வெட்ட திட்டமிடப்பட்டது. ஆனால், பூமியின் மேற்பரப்பு மண் கடினமாக இருந்ததால் அங்கிருந்த அதிகாரிகள் உள்ளூர் சூழலுக்கு ஏற்ப திட்டமிட்டனர். டிராக் டரில் ஒற்றைக் கலப்பை பொருத்தி ஒரு அடி வரையிலான இறுகிய மண்ணைத் தோண்டினார்கள். அதன்பின் கீழே இருந்த இளகிய மண் தொழிலாளர்களைக் கொண்டு வெட்டப்பட்டது. இதேமுறையில்தான் 3,500 பண்ணைக் குட்டைகள் வெட்டப்பட்டன. குறிப்பாக உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆர்வம் காட்டியதால் முத்துப்பேட்டை ஒன்றியம் தொண்டியக்காடு கிராமப் பஞ்சாயத்தில் மட்டும் அந்த ஆண்டு 50 பண்ணைக் குட்டைகள் வெட்டப்பட்டன. அன்றைய சூழலில் சட்ட ரீதியாக இது தவறு. ஆனால், தார்மீக ரீதியாக சரி. அதனால்தான், இவர்கள் செய்ததை மறு ஆண்டே சட்டமாக்கியது மத்திய அரசு.

ஆனால், நூறுநாள் வேலைத் திட்டத்தின் மூலம் தமிழ கத்தின் நீர் நிலைகளைப் புனர மைக்க அதிகாரிகளுக்கும் அரசியல் வாதிகளுக்கும் ஆர்வம் இல்லை. அவர்களுக்கு தேவை ஊழல் பணம் மட்டுமே. அவர்களுக்குத் தேவை பெரும் திட்டங்கள், பெரும் ஒப்பந் தங்கள், பெரும் நிறுவனங்கள் மட்டுமே. அப்போதுதான் கூட்டுக் கொள்ளை அடிக்க முடியும். மொத்த மாக வாரிச் சுருட்ட முடியும். மகாத்மா காந்தி வேலை உறுதித் திட்டம் போன்றதொரு உன்னத மான திட்டத்தில் சாமானிய மக்க ளுக்கு வேலையும் கூலியும் கொடுத்து விட்டால் அவர்கள் கொள்ளை அடிக்க முடியாது என்பதுதான் உண்மை.

ஆனால், இதனை எல்லாம் சொல்லாமல் ‘மகாத்மா காந்தி வேலை உறுதித் திட்டத்தில் இயந்திரங்களைப் பயன்படுத்துவதன் மூலம் சாமனிய மக்களின் பிழைப்பைப் பறிக்க மாட்டோம்’ என்று சொல்வது ஆடு நனைகிறதே என்று அரசியல்வாதி அழுகிற கதையைப் போன்றதுதான்.

- தொடரும்... | எண்ணங்களைப் பகிர: sanjeevikumar.tl@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x