Published : 04 Jun 2016 11:57 AM
Last Updated : 04 Jun 2016 11:57 AM
மதுரை அரசு ராஜாஜி மருத்துவம னையில் ஒரு பெண்ணுக்கு மூளைக்கு செல்லும் ரத்த குழாயில் தேன்கூடு போன்று இருந்த கட்டியை 5 மணி நேர அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் அகற்றி சாதனை புரிந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் அருகே வேளஞ்சேரிப்பட்டியைச் சேர்ந்தவர் அம்பிகா (32). கட ந்த 4 மாதங்களாக கழுத்தில் வலியுடன் அவதிப்பட்டு வந்த இவரை அரசு ராஜாஜி மருத் துவமனையில் சேர்த்தனர். ரத்த நாள அறுவை சிகிச்சை நிபுணர் கே. இளஞ்சேரலாதன் தலைமை யிலான மருத்துவக் குழுவினர் இவரை பரிசோதித்தனர். இவ ரது மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் தேன் கூடு போன்று அமைந்திருக்கும் அரிய வகை ‘கரோடிட்பாடி டியூமர்’ எனப்படும் ரத்தநாளக் கட்டி இருப்பதை கண்டறிந்தனர். இதை அல்ட்ரா சோனா கிராபி, சி.டி. ஆஞ்சியோகிராம் பரிசோதனை மூலம் உறுதிசெய்தனர். இதை யடுத்து, கடந்த 18-ம் தேதி 5 மணி நேர அறுவைச் சிகிச்சையில் அப்பெண்ணின் மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் இருந்த கட்டியை வெற்றிகரமாக அகற்றி மருத்துவர்கள் சாதனை படைத் தனர்.
இதுகுறித்து ரத்தநாள அறு வைச் சிகிச்சை நிபுணர் பேரா சிரியர் கே. இளங்சேரலாதன் கூறியதாவது: ரத்தக் குழாய்களில் மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய், முகத்துக்குச் செல்லும் ரத்தக் குழாய் என இரண்டு வகைகள் உண்டு.
இந்த ரத்தக் குழாய்கள் மரக் கிளை போல இரண்டாகப் பிரிந்து செல்லும். இதில் மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயின் நடுப்பகுதியில் முக்கிய செல்கள் உள்ளன. இந்த செல்கள், ஆக்ஸிஜன், கார்பன் டை ஆக்ஸைடு ஆகியவற்றை சமநிலைப்படுத்தி கட்டுப்படுத்துகிறது. அதில் ஒரு கட்டி ஏற்பட்டால் ரத்த ஓட்டம் அதிகரித்து பக்கவாதம் ஏற்படும். இந்தக் கட்டியை அகற்றாவிட்டால், நாளடைவில் புற்றுநோய் கட்டி யாக மாற வாய்ப்புள்ளது. இந்த கட்டிகளில் மூன்று வகைகள் உள்ளன. முதல் இரண்டு வகை கட்டிகள் ஏற்பட்டால், அவற்றை எளிதாக அகற்றிவிடலாம். இந்த பெண்ணுக்கு ஏற்பட்டது மூன் றாவது வகை கட்டி. இந்த கட்டியை அகற்றும் முன் ரத்தக் குழாய், குரல், மூச்சு, நாக்கு, தாடை பகுதிக்குச் செல்லும் நரம்புடன் ஒட்டியிருக்கும் நரம்புகளை அகற்றி 90 நிமிடங்களுக்கு மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் நிறுத்தப்பட்டது. அதற்கு பதில் வேறொரு ரத்தக் குழாய் மூலம் ரத்த ஓட்டம் புதுப்பிக்கப்பட்டு, பை-பாஸ் சர்ஜரி மூலம் கட்டி வெற்றிகரமாக அகற்றப்பட்டது. கட்டியை அகற்றியபின், மீண்டும் ரத்தக் குழாயையும், நரம்புகளையும் பொருத்தி ரத்த ஓட்டம் புதுப்பிக்கப்பட்டது. தற்போது பாதிக்கப்பட்ட ரத்தக் குழாய்கள், நரம்புகள் ஆரோக்கியமாக செயல் படுகின்றன. குரல் செயல் இழப்பு, நாக்கு கோணல், மூச்சு திணறல், புரையேறுதல் இல்லாமல் இயல்பான நிலைக்கு அப்பெண் திரும்பி உள்ளார்.
இந்தக் கட்டியை அகற்ற, தனியார் மருத்துவமனையில் ரூ.5 லட்சம் வரை செலவாகும். முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தில் இந்தக் கட்டியை அகற்றினோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
20 சதவீதம் பரம்பரையாக வரும்
மருத்துவர் கே.இளஞ்சேரலாதன் மேலும் கூறுகையில், இதுபோன்ற கட்டி ஒரு லட்சம் பேரில் ஒருவருக்கு வருகிறது. பெண்களுக்கு அதிகளவு இந்த கட்டி வந்துள்ளது. குறிப்பாக திண்டுக்கல், தேனி, கோவை, நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மலைக்கிராமங்களில், இந்த கட்டி அதிகமானோருக்கு வருகிறது. அங்கு ஆக்ஸிஜன் குறைவாக இருப்பதால், இந்தக் கட்டி வருகிறது. ஆண்களை விட பெண்கள் 2 மடங்கு அதிகம் பாதிப்புக்குள்ளாகிறார்கள். 20 சதவீதம் பரம்பரையாக வர வாய்ப்புள்ளது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT