Published : 13 Jun 2016 10:12 AM
Last Updated : 13 Jun 2016 10:12 AM
இந்தியாவில் 730 பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகள் இருக்கின்றன. இதில் 535 வன விலங்கு சரணாலயங்கள், 103 தேசியப் பூங்காக்கள் மற்றும் 92 இதர பாதுகாப்பு அமைப்புகள் உள்ளன. வன விலங்குகள் வேட்டையைத் தடுக்க, மாநில அளவில் மட்டுமின்றி புதுடெல்லியை மையமாகக் கொண்டு தற்போது, வேட்டை தடுப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
யானைகள் பாதுகாப்புத் திட்டத்துக்கு ஒவ்வொரு ஆண்டும், 5 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. இதில் 60 சதவீதம் மத்திய அரசு மானியம், 40 சதவீதம் மாநில அரசு மானிய நிதி உதவியில் இத்திட்டம் நிறைவேற்றப்படுகிறது. இதன்மூலம், நாடு முழுவதும் 18 யானைகள் சரகங்களை ஏற் படுத்தி, யானைகள் பாதுகாப்புக்காக பல கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. புலிகள் பாதுகாப்புக்கு இதைவிட 2 மடங்கு பணம் செலவிடப்படுகிறது.
வன விலங்குகளை பாதுகாப்பதற்காக 12-வது திட்டக்குழு மூலம் 17,800 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. குறிப்பாக, 2015-16-ம் ஆண்டில் வன விலங்குகள் பாதுகாப்புக்கு மட்டும் 805 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளதாக, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அறிக்கை தெரிவிக்கிறது. காடுகள் பாதுகாப்பு மற்றும் மேலாண்மைக்காக, வெளிநாடுகளின் நிதி உதவி மூலம் 500 கோடி ரூபாய் பெறப்படுகிறது. இந்த நிதி, காடுகளில் தீத் தடுப்பு, வேட்டைத் தடுப்பு, விலங்குகளை காப்பாற்றுதல் மற்றும் ஆராய்ச்சிகளுக்காக பயன்படுத்தப்படுகிறது.
கல்லூரிகள், பள்ளிகளில் ஆராய்ச்சிக்காக கூட விலங்குகளை கொல்லக்கூடாது என மத்திய அரசு தடை விதித்துள்ள நிலையில், சமீபத்தில் பிஹார் மாநிலத்தில் விவசாய நிலங்களில் புகுந்து சேதம் விளைவிக்கும் நீலா மான்களை சுட்டுக்கொல்ல மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இது போல, மகாராஷ்டிரா மாநிலத்தில் காட்டுப் பன்றிகளையும், இமாச்சலப் பிரதேசத்தில் குரங்குகளையும், கோவாவில் மயில்களை யும், மேற்கு வங்கத்தில் யானைகளையும் சுட்டுக் கொல்ல மத்திய அரசு அனுமதித் துள்ளதாக மத்திய அமைச்சர் மேனகா காந்தியே கடும் விமர்சனத்தை முன்வைத் துள்ளார்.
தற்போது, இந்த உத்தரவுகளை பின்பற்றி, மற்ற மாநில அரசுகளும் விவசாயிகளின் நெருக்கடியால் தங்கள் மாநிலங்களில் அச் சுறுத்தும் வனவிலங்குகளை சுட்டுக் கொல்ல அனுமதி கேட்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் சுற்றுச்சூழல், வன ஆர்வலர்கள் மட்டு மல்லாது பல்வேறு மட்டத்தில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இதுகுறித்து வன மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் எபெக் கோடை வீரா, ஷீட்ஸ் ட்ரஸ்ட் முத்துசாமி ஆகியோர் கூறியதாவது:
நாடு முழுவதும் 2015-16-ம் ஆண்டில் மட்டும் 120 வனவிலங்கு வேட்டை பற்றிய குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 25 பேர் தண்டனை பெற்றுள்ளனர். 1972-ம் ஆண்டு வன விலங்கு பாதுகாப்புச் சட்டம் சரத்து 2,3-ல் வனவிலங்குகள் பெருகி மனிதர்களுக்கோ, அவர்களைச் சார்ந்த விவசாய நிலங்களுக்கோ தீங்கு விளைவித் தால், அவற்றை கொல்லலாம் என்ற சட்டம் இருக்கிறது. வனவிலங்குகள் எண்ணிக் கையை சமநிலைப்படுத்தவே இந்த சட்டம் அப்போது கொண்டு வரப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், இன்று வரை காடுகளில் வனவிலங்குகளின் எண்ணிக்கை பெருகிவிட்டதாக இந்திய அளவில் ஆய்வு அறிக்கை வெளியிடப்படவில்லை.
காடுகளையொட்டிய மேய்ச்சல், விவசாய நிலங்கள் எவ்வளவு பரப்பளவில் உள்ளன என இன்னும் முறைப்படுத்தப்படவில்லை. வனவிலங்குகள் நடமாடும் பகுதிகளில் கட்டி டங்கள், குவாரிகள், சாலைகள் வந்துவிட்டன.
காடுகளில் வனவிலங்குகளுக்கான நீர், உணவு ஆதாரத்தை முழுமையாக ஏற்படுத்த வும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. வனவிலங்குகளுக்கு பல்வேறு வகைகளில் தொந்தரவு கொடுத்துவிட்டு, அவை ஊருக் குள் வருகின்றன, விவசாய நிலங்களை சேதப்படுத்துகின்றன என சொல்வது நியாயமில்லை. விலங்குகள், ஒரு பகுதி யில் அதிகரித்துவிட்டால் இடமாற்றம் செய்யலாம். தடுப்பு வேலிகள் அமைக்கலாம். காடுகளையொட்டிய விளைநிலங்களை முழுமையாக அளந்து அங்கு பயிரிடும் விவசாயிகளுக்கு, வனவிலங்குகள் உண் ணாத பயிர்களை பயிரிட அறிவுரை வழங்கலாம். ஆனால், வனவிலங்குகளை கொல்வதற்கு உத்தரவிடுவது ஆபத்தானது. இந்த உத்தரவை பின்பற்ற மற்ற மாநிலங்களும் அனுமதி கேட்டால், எதிர் காலத்தில் அரிய வகை வன விலங்குகளை, பாடப்புத்தகங்களில் மட்டுமே பார்க்க முடியும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
நூறாண்டுகளுக்கு முன் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட புலிகள் காடுகளில் இருந்தன. மனிதர்களால் தொடர்ந்து வேட்டையாடப்பட்டதால் தற்போது உலகில் சில ஆயிரம் புலிகளே எஞ்சி உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT