Published : 07 Aug 2016 09:02 AM
Last Updated : 07 Aug 2016 09:02 AM
தென்னிந்தியாவில் முதல் முறையாக சென்னை அம்பேத் கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய டிஜிட்டல் ஆசிரியர் பயிற்றுவிப்பு கல்லூரி தொடங்க யுஜிசிக்கு கருத் துரு அனுப்பப்பட்டுள்ளது.
சென்னை அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி 1891-ல் தொடங்கப் பட்டது. மதுரையில் 1974, திருச்சி, கோவையில் 1979, நெல்லையில் 1996, செங்கல்பட்டில் 2006, வேலூரில் 2008-ல் அரசு சட்டக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. இந்த 7 சட்டக் கல்லூரிகளிலும் மொத்தம் 9,366 மாணவ, மாண விகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த 7 கல்லூரிகளும் சென்னை அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழ கத்தின் கீழ் இயங்கி வருகின்றன. தெற்காசிய நாடுகளில் சட்டக் கல்விக்கான முதல் பல்கலைக்கழ கமும் இதுவே. மேலும் சென்னை அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழ கத்தில் சீர்மிகு (ஹானர்ஸ்) சட்டப் பள்ளி வாயிலாக பிஏ எல்எல்பி, பி.காம் எல்எல்பி, பிபிஏ எல்எல்பி, பிசிஏ எல்எல்பி மற்றும் 3 ஆண்டு எல்எல்பி படிப்புகளில் மொத்தம் 780 மாணவர்கள் சேர்க்கப்பட்டு சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் சட்டக்கல்வி பயின்று வருகின்றனர்.
இதுதவிர, 145 மாணவர்கள் முனைவர் ஆராய்ச்சிப் படிப்பை பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி ஸ்ரீரங்கம் தேசிய சட்டப்பள்ளியில் மொத்தம் 88 மாணவர்கள் சீர்மிகு படிப்பு பயில்கின்றனர்.
ஏராளமான மாணவர்கள் படித் தாலும், சட்டப் பல்கலைக்கழகம் மற்றும் சட்டக் கல்லூரிகளில் தற்போது 300-க்கும் குறைவான எண்ணிக்கையிலேயே ஆசிரியர் கள் உள்ளனர். இதனால் பல கல்லூரிகளில் பற்றாக்குறையைப் போக்க தகுதி வாய்ந்த வழக்கறி ஞர்கள் பகுதிநேர விரிவுரையாளர் களாக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
சட்டக் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையில் சட்டம் மற்றும் சட்டத்தோடு மிக நெருங் கிய தொடர்புள்ள பாடங்களில் புதிதாக பணியமர்த்தப்பட்ட ஆசி ரியர்களுக்கு பணியிடை பயிற்சி அளிக்க வேண்டியது அவசியமா கிறது. இதற்காக தென்னிந்தியாவில் அனைத்து வசதிகளுடன், தரம் வாய்ந்த டிஜிட்டல் ஆசிரியர் பயிற் றுவிப்பு மையத்தை சென்னை பெருங்குடி பல்கலைக்கழக வளா கத்தில் தொடங்க பல்கலைக்கழக நிர்வாகம் யுஜிசிக்கு கருத்துரு அனுப்பியுள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் கூறியதாவது:
சட்டக் கல்வி மீதான மோகம்
இந்த ஆண்டு பொறியியல் படிப் புகளைவிட சட்டக்கல்வி மீதான மோகம் மாணவர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதனால் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் சட்டக் கல்வி கட்ஆப் மதிப்பெண் ணும் அதிகரித்துள்ளது. அதற் கேற்ப ஆசிரியர் களின் பணி மேம் பாட்டுத் திறனை அதிகரிப்பதும் அவசியம்.
புதிதாக பணியமர்த்தப் பட்டுள்ள ஆசிரியர் கள் செயலாக்க, புத்தாக்கப் பயிற்சிகளில் பங் கேற்றால் மட்டுமே அவர்களால் தரமான கல்வியை வழங்க முடி யும். அதற்கு வழி காணும் வகை யில் தென்னிந் தியாவிலேயே முதன்முறையாக சென்னை பல் கலைக்கழகத்தில் டிஜிட்டல் பயிற்று விப்பு கல்லூரி தொடங்க யுஜிசிக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. உரிய அனுமதி கிடைத்ததும் அதற்கான பணிகள் தொடங்கும். தவிர, ஆராய்ச்சி மாணவர்களுக்கு உதவ தடயவியல் ஆராய்ச்சிக்கூடம் ஒன்றும் வெகு விரைவில் அமைக்கப்பட உள்ளது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT