Published : 23 Jan 2017 05:56 PM
Last Updated : 23 Jan 2017 05:56 PM
மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள், மாணவர்களை போலீஸார் திங்கள்கிழமை காலை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். இதனால் கடலுக்குள் இறங்கி போராட்டக்காரர்கள் தங்கள் போராட்டத்தை அறவழியில் தொடர்ந்தனர். கடற்கரையில் மனிதச் சங்கிலி அமைத்து போராட்டக் களத்தில் இளைஞர்களும் மாணவர்களும் அமைதி காத்தனர். மெரினாவுக்குள் யாரும் நுழைய முடியாத அளவுக்கு அனைத்து வழிகளையும் போலீஸார் அடைத்தனர்.
இந்தச் சூழலை அறிந்த மெரினா கடற்கரையைச் சுற்றியுள்ள குடிசைப் பகுதிகளில் வசிக்கும் மீனவர்களும் பெண்களும் உடனடியாக கடற்கரையை நோக்கி படையெடுத்தனர். சமாதானப் பேச்சு தொடங்கும் வரை, அங்கு இளைஞர்களுக்கு பாதுகாப்பு அரணாகவே அவர்கள் இருந்தனர்.
அப்போது, ஆவேசம் அடைந்த ஒரு பாட்டி உணர்ச்சிமயமாக வெகுண்டெழுந்து காவல் துறை நடவடிக்கைக்கு எதிராக களத்தில் இறங்கினார். அவரது உணர்வுபூர்வ செயல்பாடுகளைக் கண்டு போலீஸார் திகைத்தனர். போராட்டக் களத்தில் இருந்த இளைஞர்களோ அந்தப் பாட்டியிடம் நெகிழ்ச்சியோடு கண்ணீர்மல்க நன்றி தெரிவித்தனர். அதில் ஓர் இளைஞர் நெடுஞ்சான் கிடையாக அவர் முன்பு விழுந்து தலை வணங்கி தன் வணக்கத்தை தெரிவித்தது நெகிழவைத்த காட்சி. இந்த நிகழ்வு இங்கே புகைப்படத் தொகுப்பாக...
படங்கள்:எல்.சீனிவாசன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT