Published : 01 Mar 2014 12:00 AM
Last Updated : 01 Mar 2014 12:00 AM

தமிழகத்தில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் திடீர் மாற்றம்- தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் உத்தரவு

தமிழகத்தில் 6 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட உத்தரவின் விவரம் வருமாறு:

தமிழ்நாடு சர்க்கரைத் துறை மேலாண் இயக்குநர் மற்றும் இயக்குநர் மகேசன் காசிராஜன், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். அப்பதவியை வகித்து வந்த குமரகுருபரனுக்குப் புதிய பணியிடம் வழங்கப்படவில்லை. மேலும், அவர் கூடுதலாக வகித்து வந்த அரசு கேபிள் டி.வி. மேலாண் இயக்குநர் பதவியையும் மகேசன் காசிராஜன் வகிப்பார். தமிழ் வளர்ச்சித் துறை கூடுதல் செயலாளராகவும் இருப்பார்.

தமிழக அரசின் தொழில் துறை முதன்மைச் செயலாளர் சி.வி.சங்கர் தமிழ்நாடு சர்க்கரை கழகத்தின் நிர்வாக இயக்குநராகக் கூடுதல் பொறுப்பை ஏற்பார்.

கருவூலத்துறை இயக்குநராக, வேளாண் விற்பனை இயக்குநர் அனில்மேஷ்ராம் பொறுப்பு வகிப்பார்.

சமூக பாதுகாப்புத் திட்ட இணை இயக்குநர் எஸ்.மலர்விழி, வணிக வரித்துறை இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுபோல், நாமக்கல் சார் ஆட்சியர் அஜய் யாதவ், கோவை வணிகவரி இணை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கால்நடைத்துறை இயக்குநராக இருந்த டாக்டர் ஆர்.பழனிச்சாமி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய நிர்வாக இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.

கோவையில் ஒழுங்கு நடைமுறை ஆணையராக இருந்து வரும் வி.சாந்தா, சேலம் சவ்வரிசி ஆலை மேலாண் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x