Published : 20 Jun 2015 12:23 PM
Last Updated : 20 Jun 2015 12:23 PM

உலக ரத்ததான தினத்தையொட்டி விழுப்புரம் ஆட்சியர் சம்பத் 13வது முறையாக ரத்ததானம் செய்தார்

உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு விழுப்புரம் ஆட்சியர் சம்பத் 13வது முறையாக ரத்ததானம் செய்து முகாமை தொடங்கி வைத்தார்.

விழுப்புரம் அருகே முண்டியம் பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், விழுப்புரம் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு ஆகியவை இணைந்து உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு ரத்ததான முகாம் நடத்தின. அதில், ஆட்சியர் சம்பத் பங்கேற்று ரத்ததானம் செய்து முகாமை தொடங்கி வைத்தார். அவர், 13வது முறையாக ரத்த தானம் செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்த ரத்ததான முகாமில் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர், இணை இயக்குநர், துணை இயக்குநர், மருத்துவ கல்லூரி மாணவ, மாணவிகள் உட்பட 35 பேர் ரத்ததானம் வழங்கினர். ரத்ததானம் வழங்கியவர்களுக்கு ஆட்சியர் சம்பத் சான்றிதழ்கள் வழங்கினார். தனது 20 வயதுக் குள் 5 முறை ரத்ததானம் செய்த மருத்துவ கல்லூரி மாணவர் சண்முகத்தை ஆட்சியர் பாராட்டினார்.

பின்னர் அவர் பேசும்போது, “விழுப்புரம் மாவட்டத்தில் மாதத் துக்கு 1250 யூனிட் ரத்த அலகு தேவைப்படுகிறது. 2400 யூனிட் ரத்தம் சேமித்து வைக்க வசதிகள் உள்ளன. முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுரி மருத்துவமனை, கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனை, உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனை. திண்டிவனம் அரசு மருத்துவமனை உட்பட பல்வேறு இடங்களில் ரத்த சேமிப்பு வங்கிகள் உள்ளன.

13 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் ரத்த சேமிப்பு மையங்கள் உள்ளன. 18 முதல் 60 வயது வரை உள்ளவர்கள் 3 மாதத்துக்கு ஒருமுறை ரத்த தானம் செய்யலாம். ரத்த தானம் செய்பவர்களின் எடை குறைந்த பட்சம் 45 கிலோ இருக்க வேண் டும். ஹீமோகுளோபின் (HB) அளவு 12.5 இருக்க வேண்டும். ரத்ததானம் செய்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்” என்றார். இந்த முகாமில் மருத் துவக் கல்லூரி முதல்வர் (பொ) டாக்டர்.சிவக்குமார், துணை முதல்வர் டாக்டர்.ராஜாராம், இணை இயக்குநர் (பொ) டாக்டர்.சுந்தர்ராஜ், துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) டாக்டர்.மீரா, செய்தி மக்கள் தொடர்பு அலு வலர் சிங்காரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் மாதத்துக்கு 1250 யூனிட் ரத்த அலகு தேவைப்படுகிறது. 2400 யூனிட் ரத்தம் சேமித்து வைக்க வசதிகள் உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x