Published : 25 Aug 2016 10:07 AM
Last Updated : 25 Aug 2016 10:07 AM
இரட்டை வாக்குரிமையைத் தடுக்க வாக்காளர் பெயர் பட்டியலை கேரள அதிகாரிகள் தராமல் மவுனம் சாதித்து வருவதால், தமிழக தொழிலாளர்கள் திண்டாடி வருவதாக புகார் எழுந்துள்ளது.
கேரள மாநிலம், இடுக்கி மாவட் டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 60 ஆயிரம் பேர் தங்கி, தோட்ட வேலை செய்து வருகின்ற னர். இவர்கள் தேர்தலின்போது கேரளத்திலும், தமிழகத்திலும் மாறி மாறி வாக்களித்து வருகின்றனர். இந்த இரட்டை வாக்குரிமையை தடுத்து நிறுத்தக் கோரி தேர்தல் ஆணையம் இரு மாநில அரசுகளை யும் அறிவுறுத்தி வருகிறது. இதனால் தேர்தலுக்கு முன்பு இரு மாநில அரசு உயர் அதிகாரிகள் சந்தித்து கூட்டம் நடத்துகின்றனர். ஆனால், இரு மாநில அதிகாரிகளுக்கு இடையே பரஸ்பர ஒருங்கிணைப்பு இல்லை. இக்காரணத்தால் கண் துடைப்புக்காக மட்டும் கூட்டம் நடத்திவிட்டு நடவடிக்கை எடுக்கா மல் மெத்தனம் காட்டி வருவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் தேர்தலில் வாக்களிக்க முடியாமல் கேரளத்தில் தங்கியுள்ள தமிழக தொழிலாளர்கள் திண்டாட்டம் அடைந்து வருகின்றனர்.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் தமிழக தோட்ட தொழிலாளர்கள் சிலர் கூறியதாவது: இரட்டை வாக் குரிமை பிரச்சினை தொடர்பாக, கேரள உயர் நீதிமன்றம் உத்தர வுப்படி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் குமுளியில் தமிழக - கேரள அதிகாரிகள் முகாமிட்டு முதற்கட்ட மாக உடும்பன்சோலை தொகுதி மற்றும் கம்பம் தொகுதியில் இரட்டை வாக்குரிமை பெற்றிருந்த 142 பேரை கண்டறிந்தனர். இதில் பலர் தமிழகத்தில் வாக்களிக்க விருப்பம் தெரிவித்து, கேரளத்து வாக்குரிமையை ரத்துசெய்துவிட்டு தமிழகத்தில் வாக்களித்தனர்.
அடுத்த கட்டமாக பீர்மேடு, தொடு புழா உள்ளிட்ட மற்ற தொகுதி யில் வசிக்கும் இரட்டை வாக்காளர் களிடம் கூட்டம் நடத்தி தீர்வு காணப்படும் என இரு மாநில அதி காரிகளும் உறுதி அளித்தனர். ஆனால், இதுவரை எந்த நடவடிக் கையும் எடுக்கப்படவில்லை, கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது கம்பம், போடி தொகுதி களில் வாக்களிக்க வந்த 200-க்கும் மேற்பட்ட தமிழக தொழிலாளர் களை இரட்டை வாக்குரிமை என்று கூறி தமிழக அதிகாரிகள் அவர்களை வாக்களிக்க விட வில்லை. கேரளத்திலும் அவர்கள் வாக்களிக்க முடியவில்லை.
விரைவில் தமிழகத்தில் உள் ளாட்சித் தேர்தல் வர உள்ளதால், தமிழக அதிகாரிகள் இரட்டை வாக்குரிமை பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டும். இல்லாவிட்டால் கடந்த காலங்களைப் போல் மீண்டும் நாங்கள் அலைக்கழிக்கப்பட்டு அவதிப்பட நேரிடும் என்றனர்.
இது தொடர்பாக தேனி மாவட்ட அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, இரட்டை வாக்காளர் பட்டியலை கேட்டு கடந்த இரு மாதங்களுக்கு முன்பு கேரள அதிகாரிகளுக்கு கடிதம் எழுதப்பட்டது. ஆனால் இதுவரை பதில் வரவில்லை, மீண் டும் கடிதம் அனுப்ப உள்ளோம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT