Published : 27 Oct 2014 09:12 AM
Last Updated : 27 Oct 2014 09:12 AM
இடைத்தேர்தல்கள் என்றாலே அதில் ஆளும்கட்சியே ஆதிக்கம் செலுத்தும். கடந்த காலங்களில் நடந்த சங்கரன் கோவில், மதுரை மத்திய தொகுதி, மதுரை மேற்கு, திருமங்கலம், தருமபுரி, புதுக்கோட்டை, ஏற்காடு உள்ளிட்ட அனைத்து இடைத்தேர்தல்களிலும் ஆளும்கட்சிகளே ஆதிக்கம் செலுத் தின. வாக்காளர்கள் விலைக்கு வாங்கப்பட்டனர். ஓட்டுக்கு அதிக பட்சம் ஆறாயிரம் ரூபாய் வரை வழங்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன. தேர்தல் கமிஷன் எவ்வளவு கடுமை காட்டினாலும் பிரி யாணி விருந்துகளையும் இலவச பரிசுகளையும் தடுக்க முடிய வில்லை. மொத்த அமைச்சர்களும் தங்கள் பணிகளை தவிர்த்துவிட்டு, குறிப்பிட்டத் தொகுதியில் பிரச்சாரம் செய்தார்கள். இத னால், மேற்கண்ட அனைத்து இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சிகளே வெற்றி பெற்றன.
இந்த நிலையில்தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு வரும் 6 மாதத்துக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளது. கடந்த காலங் களில் நடந்த மற்ற எந்த இடைத் தேர்தலையும் விட இந்தத் தேர்தல் அரசியல் கட்சிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
அதிமுக கட்சியைப் பொறுத்த வரை ஜெயலலிதாவுக்கு தண்டனை அறிவித்திருந்தாலும்கூட கட்சி இன்னமும் பலமாகவும் கட்டுக் கோப்பாகவும்தான் இருக்கிறது என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால்தான் ‘ஜெய லலிதா மக்கள் செல்வாக்கை இழக்கவில்லை’ என்பதையும் உணர்த்த முடியும். மேலும், உச்ச நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் அளித்துள்ள நிலை யில் அக்கட்சி வரும் இடைத் தேர்தலுக்கான பணிகளை கூடுதல் உற்சாகத்துடன் முடுக்கிவிட வாய்ப் புள்ளது.
திமுக-வில் வேட்பாளரை தேர்வு செய்யும் பணிகள் தொடங்கி விட்டன. ஸ்ரீரங்கம் தொகுதியில் 40 சதவீதம் பெரும்பான்மையாக இருக்கும் குறிப்பிட்ட சமூகத்தி லிருந்து வேட்பாளர் தேர்வு செய்யப்படுவார் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம், பாஜக-வும் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிடும் என்று தெரிகிறது. ஏனெனில், கடந்த உள்ளாட்சித் தேர்தலில் எதிர்க்கட்சிகள் எதுவும் போட்டியிடாத நிலையில் அதிமுக-வை எதிர்த்து தனித்து நின்றது அந்தக் கட்சி. அப்போது பல இடங்களில் அந்தக் கட்சியின் வேட்பாளர்கள் விலைக்கு வாங்கப்பட்டனர். சிலர் அதிமுக கட்சிக்கே அணி மாறினர். இதனால், அதிமுக மீது கடும் கோபத்தில் இருக்கிறது பாஜக.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் பேசிய அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், “காட்சிகள் இவ்வளவு சீக்கிரம் மாறும் என்று எதிர்பார்க்கவில்லை. வரும் இடைத்தேர்தல் காலகட்டம் எங்களுக்கு சாதகமாக அமையும். ஆனாலும், கட்சியின் உயர் மட்டக்குழு கூடி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு செய்வோம்” என்றார்.
அதேசமயம் சமீப நாட்களாக மதிமுக, திமுக கட்சியுடன் நெருக் கம் காட்டிவருகிறது. தேமுதிக, பாஜக-வுடன் நெருக்கமாகவே இருக்கிறது. எனவே தங்கள் தோழமை கட்சிகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் அந்த இரு கட்சிகளும் போட்டியிடுமா என்பது இன்னமும் முடிவாகவில்லை.
இதற்கிடையே கடந்த கால இடைத்தேர்தல்களை போல அல்லாமல் மிகுந்த கண்டிப்புடனும், நேர்மையுடனும் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் நடக்க வேண்டும் என்று மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தேவைப்பட்டால் இடைத்தேர்தலின்போது தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை சுட்டிகாட்டி அரசியல் சாசனப் பிரிவு 355-யை கையில் எடுத்து சட்டம் ஒழுங்கு அதிகாரத்தை கையில் எடுக்கவும் மத்திய அரசு தயாராக இருப்பதாக பாஜக-வினர் தெரிவிக்கின்றனர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT