Published : 29 Jun 2016 09:56 AM
Last Updated : 29 Jun 2016 09:56 AM

தி.மலை அண்ணாமலையார் கோயிலில் ராஜேந்திர சோழன் காலத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு

அழியும் நிலையில் இருப்பதாக தகவல்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ராஜேந்திர சோழன் காலத்தில் பூஜைகள் நடத்தப் பட்டதற்கு சான்றாக கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பிரசித்திப் பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயி லில் சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகரப் பேரரசு, நாயக்கர்கள் காலத்தை குறிக்கும் வகையில் பல்வேறு கல்வெட்டுகள் உள்ளன. அதில் பெரும்பான்மையான கல் வெட்டுகளில், ‘விளக்கு ஏற்றுவதற் கும் மற்றும் கோயில் பூஜை களுக்கும்’ தானம் கொடுக்கப்பட்ட தகவல்கள் பதிவாகி உள்ளன.

இந்நிலையில், பாரம்பரியமிக்க மரபுச் சின்னங்களை ஆவணப்படுத் திடும் வகையில் செயல்பட்டு வரும் ‘திருவண்ணாமலை மரபுசார் அமைப்பு’ மூலம் அண்ணாமலை யார் கோயிலில் ஆய்வு மேற் கொள்ளப்பட்டன. அப்போது, மூன்றாம் பிரகாரத்தில் கல்யாண மண்டப வாசலில், ஒரு துண்டு கல்வெட்டு தரையில் பதிக்கப்பட்டு அழியும் நிலையில் இருந்தது தெரியவந்தது. அதை கள ஆய் வாளர்களான ராஜ் பன்னீர்செல்வம் மற்றும் அருண்குமார் பங்கஜ் ஆகியோர் கண்டறிந்து ஆய்வு செய்துள்ளனர். அந்த கல்வெட்டு முதலாம் ராஜராஜனின் மகனான முதலாம் ராஜேந்திர சோழன் (கி.பி. 1012 - 1044) காலத்தைச் சேர்ந்தது என தெரியவந்துள்ளது.

இதுகுறித்து ராஜ் பன்னீர் செல்வம் கூறும்போது, “முதலாம் ராஜேந்திர சோழனின் மெய் கீர்த்தி யுடன் தொடங்கும் அந்த கல்வெட் டில், அவனது பல வெற்றிகள் (கடாராம் வென்றான் முதலான வெற்றிகள்) வரிசைப்படுத்தப்பட் டுள்ளன. அதில், இறுதியாக கோயி லின் கால பூஜைகளுக்கு நிவந்தம் (நைவேத்தியம்) அளித்த செய்தி யும் இடம்பெற்றுள்ளன. இந்த கல் வெட்டு, ஒரு முழு கல்வெட்டின் ஒரு பகுதியே ஆகும். இதற்கு முன் னர் நடைபெற்ற திருப்பணிகளின் போது, கல்வெட்டு சேதமடைந்து இருக்கலாம். அதில், மீதமிருந்த கல்வெட்டு பகுதிதான், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த கல்வெட்டில் ராஜேந்திர சோழன் என்பது மட்டுமே காணப் படுகிறது. அதனால், அந்த கல் வெட்டில் ராஜேந்திர சோழனின் நேரடி தானமா? அல்லது வேறு ஒருவர் மூலம் அளிக்கப்பட்டதா? என தெரியவில்லை.

இப்போது கண்டுபிடிக்கப் பட்டுள்ள கல்வெட்டின் தொடர்ச்சி (மற்ற பகுதிகள்) கிடைக்கப்பெற்றால் முழு விவரம் தெரியவரும். அவற்றை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளோம். தரை யில் பதிக்கப்பட்டுள்ள 1,000 ஆண்டு கால பழமையான கல்வெட்டை, கோயில் நிர்வாகம் பாதுகாத்திட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x