Published : 07 Oct 2013 10:21 PM
Last Updated : 07 Oct 2013 10:21 PM

ராமதாஸ் வழியில் இழிவான செயலில் ஈடுபட மாட்டேன்: திருமாவளவன் தாக்கு

அனைத்து சாதி தலைவர்களையும் ஒன்று திரட்டி அதன் மூலம் அரசியல் ஆதாயம் காணவேண்டும் வேண்டும் என்பதுதான் ராமதாஸின் இழிவான எண்ணம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப் பொதுச் செயலர் திருமாவளவன் சாடினார்.

நெய்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “அனைத்து சாதி தலைவர்களையும் ஒன்று திரட்டி, அதன் மூலம் அரசியல் ஆதாயம் காணவேண்டும் வேண்டும் என்ற ராமதாஸ் வழியில் இழிவான செயல்களில் நான் ஈடுபடமாட்டேன்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் அரசியல் கட்சிகளுக்கு இடையே என்கிற நிலை மாறி, மதவாத சக்திகளுக்கும், மதவாத எதிர்ப்பு சக்திகளுக்கும் இடையே என்பது தற்போது உணரமுடிகிறது.

இந்தியாவின் ராஜபக்‌ஷ என வர்ணிக்கப்படும் நரேந்திர மோடி பா.ஜ.க-வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் தலித் மற்றும் முஸ்லிம் சமுதாயத்தினர் மத்தியில் அச்சம் நிலவுகிறது. எனவே மதவாத எதிர்ப்பு சக்திகள் அனைவரும் ஓரணியில் திரளவேண்டிய கட்டாயச் சூழல் இப்போது ஏற்பட்டு உள்ளது.

குஜராத்தில் அப்பாவி முல்லிம்கள் மீது மோடி நடத்திய காட்டுமிராண்டித் தனமான மனித உரிமை மீறலை அறித்து, அமெரிக்க அரசு இவருக்கு விசா வழங்க மறுத்து உள்ளது. இதை நாம் முதலில் புரிந்துகொள்ளவேண்டும்.

தமிழகத்தில் அப்பாவி முஸ்லின் இளைஞர்களும் தலித் இளைஞர்களையும் குறிவைத்து அடக்குமுறை அரங்கேறிவருகிறது. அமைதியான தமிழகத்தில் சாதியின் பெயரால் கூட்டம் நடத்தி, தமிழகத்தில் சட்டம் ஒழங்கைச் சீர்குலைக்க முயற்சி நடந்துவருவதை முதல்வர் கண்காணித்து, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவேண்டும். தற்போது நான் தொகுதி மாறி போட்டியிடும் சூழல் எழவில்லை” என்றார் திருமாவளவன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x